Wednesday, January 11, 2012

ஷங்கநண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்... தேறுமா?

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முதல் படமான நண்பன், பொங்கல் ஸ்பெஷலாக இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகியுள்ளது.

பொதுவாக விஜய் படங்களுக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்பை ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை. விஜய் நடிப்பில் நண்பன் என்று ஒரு வெளியாகுதுப்பா என்ற அளவுக்குதான் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.

சத்யராஜ் தவிர வேறு யாரும் இந்தப் படம் இப்படியாக்கும் அப்படியாக்கும் என தம்பட்டம் அடிக்கவில்லை.

காரணம்... இந்தப் படத்தை மக்கள் எப்படி வரவேற்பார்களோ என்ற தயக்கம்தான். இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் பெரும் வெற்றியைக் குவித்தது. வசூலும் பிரமிக்க வைத்தது.

ஆனால் தமிழில் இந்த மாதிரி கதைகள் எப்படி வரவேற்கப்படும் என கணிக்க முடியாத நிலை. அதனால் அமைதி காத்தனர். இதற்கிடையில், 3 இடியட்ஸுக்கு அடுத்து பெரும் வசூல் குவித்த படம் என இந்தியில் கொண்டாடப்பட்ட தபாங் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் வெளியாகி குப்புற கவிழ்ந்துபோனது.

எனவே படம் குறித்து எதுவும் சொல்லாமல், மக்கள் முடிவுக்கே விட்டுவிடலாம் என அமைதியாகிவிட்டது ஷங்கர் அண்ட் கோ.

இந்த நிலையில் படம் இன்று காலை வெளியாகிவிட்டது. உலகமெங்கும் மிகப்பெரிய அளவில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். ஜெமினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமை சன்டிவிக்கு தரப்பட்டிருந்தாலும் அதை வெளியில் சொல்லாமல் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சன் டிவியை எதிர்த்துதான் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் நேற்றே நண்பன் சிறப்புக் காட்சிகள் தொடங்கிவிட்டதால், படம் குறித்து கருத்துகளை பரப்பி வருகின்றனர் பார்த்தவர்கள்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் இந்தப் படம் குறித்து எதிர்மறையான கருத்துக்களே வெளியாகியுள்ளதால், நண்பன் குழு பெரும் கலக்கத்துக்குள்ளாகியுள்ளது. 'காமெடி படம் என்றார்கள்... ஆனால் இப்போது அப்படி சொன்னவர்கள் காமெடியாகிப் போய்விட்டார்கள்' என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு 100-க்கு 25 மார்க்தான் என முன்பு சினிமா உலகைக் கலக்கிய நாக்ரவி தனது ரேடியோவில் விமர்சனம் வெளியிட்டுள்ளார். "இந்தப் படத்துக்கு செலவழித்த பணத்தில் 10 படம் எடுத்து, சிலவற்றையாவது சூப்பர் ஹிட்டாக்கியிருக்கலாம்," என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கே புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என விஜய், ஷங்கர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

இன்று மாலைக்குப் பிறகு படத்தின் நிலைமை தெரிந்துவிடும். நாளை காலை தட்ஸ்தமிழில் படத்தின் சிறப்பு விமர்சனத்தை எதிர்பாருங்கள்!


0 comments:

Post a Comment