Wednesday, January 11, 2012

ஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி

தினமும் நாம் காலையிலும் மாலையிலும் பல்வேறு வேலைகள் காரணமாக நேரமின்றி தவித்து வருகிறோம், ஆனால் இது நம் ஆயுளைக் குறைப்பதாகும். எனவே தினமும் ஒரு 15 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் 3 ஆண்டுகள் நம் ஆயுள் கூடுகிறதாம்.

இதனைக் கூறுபவர்கள் ஜெர்மனி நரபியல் மருத்துவ நிபுணர்கள் ஆவர்.

தினமும் முறையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஸ்ட்ரோக், இருதய ரத்தக்குழாய் நோய்கள், புற்று நோய் மற்றும் நீரிழிவு ஆகியவை தாக்குவதன் சந்தர்ப்பங்கள் பெருமளவு குறைவதாக இவர்கள் கூறுகின்றனர்.

தய்வானில் 4,00,000 பேரை ஆய்வு செய்ததிலிருந்து இந்த உண்மை தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 8 ஆண்டுகளாக தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்னவென்றால் தினமும் ஒரு 15 நிமிடம் முறையான தேகப்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்கிறது என்பதுதான்.

பயிற்சியே செய்யாமல் இருப்பவர்களைக் காட்டிலும் பயிற்சி செய்பவர்களின் மரண விகிதம் 14% குறைவாக இருப்பதாகவும் இந்த நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகச் சுகாதார மையம் தினமும் 30 நிமிடங்கள் தேகப்பயிற்சி அவசியம் என்று கூறியுள்ளது.

ஆனால் 15 நிமிடங்களே போதும் 3 ஆண்டுகள் உங்கள் ஆயுள் கூடுகிறது.

பயிற்சி செய்யாமல் வாழ்பவர்களே உஷார். 15 நிமிடம் ஒதுக்குங்கள் ஆயுளைக் கூட்டுங்கள்.



0 comments:

Post a Comment