தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக...

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபை...

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, March 16, 2012

விரைவில் வருகிறார் லாரன்சின் தம்பி

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதை அண்ணனுடையான் படைக்கு அஞ்சான் என்று மாற்றலாம்.

செல்வராகவன் என்ற அண்ணனால் ஏற்றம் பெற்றவர் தனுஷ், ஜெயம் ரவிக்கு அண்ணன் ராஜா, முருகதாஸும், பூபதி பாண்டியனும் விரைவில் தங்கள் தம்பிகளை அறிமுகப்படுத்தயிருக்கிறார்கள். இந்த நீண்ட பட்டியலில் புதிதாக சேர்கிறார் ராகவா லாரன்ஸ்.

இவரும் தனது தம்பி வினோ லாரன்ஸை விரைவில் ஹீரோவாக்குகிறார். முன்னோட்டமாக முனி 3-ல் தம்பியை ஒரு பாடலுக்கு ஆடவிடப் போகிறாராம்.

பாசக்கார அண்ணன்கள். 
thanks:webdunia 

Thursday, March 8, 2012

பலாத்கார சர்ச்சையில் ப்‌ரியாமணி

்‌ரியாமணி தேசிய விருது வாங்கிய பிறகும் தமிழ் சினிமா அவ‌ரிடம் மாற்றான் மனப்பான்மையுடன்தான் நடந்து கொள்கிறது. ஆனால் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களில் தொடர்ச்சியாக முத்தழகியை பார்க்க முடிகிறது. தமிழில் வாய்ப்பு இல்லாததால் சற்று வருத்தத்தில் இருந்த அவரை வெறுப்படைய வைத்துள்ளது சமீபத்தில் கிளம்பிய பலாத்கார வதந்தி.

செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் போட்டியில் தமிழக அணி கோப்பையை கைப்பற்றியதை சென்னை நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள். ஆல்கஹால் ஆறாக ஓடிய இந்தப் பார்ட்டியில் மப்பும் மந்தாரமுமாகவே அனைவரும் காட்சியளித்திருக்கிறார்கள். ப்‌ரியாமணிக்கு மட்டும் ஓவர் டோஸாகிவிட்டதாம்.

அரைகுறை மயக்கத்தில் இருந்தவரை ஐந்து பேர் கும்பல் இஷ்டத்துக்கு விளையாடியதாக பார்ட்டிக்கு மறுநாளே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த‌ச் செய்தி ஹைதராபாத்தை தாண்டி ப்‌ரியாமணியின் காதுகளையும் எட்டியது. அவ்வளவுதான்.. நான் போட்டி முடிஞ்சதுமே ஃபிளையட் ஏறிட்டேன், பார்ட்டியில் கலந்து கொள்ளவே இல்லை. பிறகெப்படி இந்த மாதி‌ரி சீப்பாக வதந்தி கிளப்புகிறார்கள் என்று காதில் புகை வரும் அளவுக்கு பொ‌ரிந்திருக்கிறார்.

இனி தமிழில் நடிக்கக் கூப்பிட்டாலும் சென்னைக்கு வருவாரா என்பது சந்தேகம்தான்.

Monday, March 5, 2012

ஸ்ரோயாவை சூடாக்கிய தயா‌ரிப்பாளர்

ஸ்ரேயாவுக்கும் சேர நாட்டுக்கும் செட்டாவதேயில்லை. எப்படி டியூன் செய்தாலும் ஒரே கர்ர்ர்... புர்ர்ர்... சத்தம்தான்.

மோகன்லால் ஜோடியாக ஸ்ரேயா காஸனோவா என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் இதுதான் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். ஆறு மாதத்தில் முடிய வேண்டிய படம் பல வருடங்கள் ஜவ்வாக இழுத்து ஒருவழியாக வெளியாகி, இந்த வருடத்தின் மொக்கைப் படங்களில் ஒன்று என பெயர் வாங்கியது.

இதற்கு முன்னால் இன்னொரு சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் போக்கி‌ரிராஜஎன்ற படத்தில் நடித்தார். இதில் மம்முட்டியின் தம்பி பிருத்விரா‌ஜின் காதலியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. சூப்பர் மொக்கையான இந்தப் படத்தை ராஜா போக்கி‌ரி ராஜஎன்ற பெய‌ரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இதுதான் பிரச்சனை.

போக்கி‌ரிராஜாவில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது தயா‌ரிப்பாளருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டாராம் ஸ்ரேயா. அதாவது போக்கி‌ரிராஜாவை வேறு மொழிகளில் டப் செய்யக் கூடாது என்பதுதான் அது. அதை மீறி தயா‌ரிப்பாளர் இப்போது படத்தை தமிழில் வெளியிடுகிறார். இதனால் சூடாகிப் போன ஸ்ரேயா நடிகர் சங்கத்தில் இது குறித்து புகார் தெ‌ரிவித்துள்ளார்.

ச‌ரி, போக்கி‌ரிராஜாவை தமிழில் வெளியிட்டால் என்னவாகிடப் போகிறது? ஸ்ரேயா ஏன் இதற்கு பதற்றப்பட வேண்டும்? ஓவர் கவர்ச்சியில் நடித்திருக்கிறாரா?

அதெல்லாம் இல்லை. மம்முட்டி, பிருத்விரா‌ஜ் பில்டப்புகளுக்கு நடுவில் ஸ்ரேயாவின் வேடம் சின்ன பிட்டாக சுருங்கிவிட்டது. இதனால்தான் தனி ஹீரோயினாக நடிக்கும் தமிழில் இப்படம் வரக்கூடாது என்கிறார் ஸ்ரேயா. படமோ, வேஷமோ... பிட் என்றாலே பிரச்சனைதான்.

Monday, February 20, 2012

அனன்யாவின் அன் லிமிடெட் லவ்

படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹோம்லி டைப் அனன்யா. அதனால்தான் காதலித்து கல்யாணம் பண்ண மாட்டேன் என்று கூறி, பெற்றோர் பார்த்த தொழிலதிபர் ஆஞ்சநேயனை மணக்க சம்மதித்தார். ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று நிச்சயதார்த்தத்துக்கு பிறகே தெ‌ரிய வந்து அனன்யாவின் அப்பா அவர் மீது போலீஸில் புகார் தந்தார். இதெல்லாம் அனைவரும் அறிந்த பிளாஷ்பேக்.

இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக அனன்யா வாய் திறந்திருக்கிறார்.

அதாகப்பட்டது, அனன்யாவை அவரது பெற்றோர் வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகச் சொன்னது பொய்யாம். அதேபோல் ஆஞ்சநேயன் மீது வேண்டுமென்றே அவதூறாக களங்கம் கற்பிக்கிறார்களாம். அதையெல்லாம் பொய் என்று நிரூபித்து, பிரச்சனைகள் அடங்கிய பின் ஆஞ்சநேயனை திருமணம் செய்து கொள்வாராம். ஆஞ்சநேயன்தான் என் புருஷன் என்பதில் சந்தேகமில்லை என்று தொடை தட்டாத குறையாக சத்தியம் செய்திருக்கிறார் அனன்யா.

இந்த விளக்கத்தில் ஆஞ்சநேயனின் முதல் திருமணம் பற்றியோ, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது குறித்தோ அனன்யா எதுவும் தெ‌ரிவிக்கவில்லை. ஆஞ்சநேயன் மீது அனன்யாவுக்கு அவ்ளோ காதல்.

பாணியை மாற்றும் விஜய்

பஞ்ச் டயலாக் பேசுவது ,பறந்து பறந்து சண்டை போடுவது என்று ,அனல் பறக்க நடித்த படங்கள் வெற்றி பெறாதலால் ,நண்பன் படத்துக்கு பின், ரூட்டை மாற்றுகிறார் விஜய்,மேலும்,இனி எந்த  படமாக இருந்தாலும் ,கதைக்கேற்ப அடக்க ஒடுக்கமாக நடிக்க அவர் முடிவு எடித்திருபதல் ,சில பிரபல இயக்குனர்கள் ,விஜய்காக வித்தியாசமான கதைகள் உருவாகும் பணியில் இறங்கியுள்ளன.

வருடம் ஒரு படம்:அஜீத்

வருடதிற்கு ஒரு படம் என்பதில் தெளிவாக இருக்கிறார்,அஜீத்.
பில்லா 2 படத்தை முடித்த கையோடுவிஷ்ணுவர்தன் இயக்கும் படத்துக்கு வருகிறார்.ஒரு சமயத்தில் ஒரு படம் என்பதால் கதையில் முலுகவனம் செலுத்த முடிகிறது என்பது இவர் வாதம்.

கொஞ்சும் கோபம்:சற்குணம் ,விக்ரம் ....

களவாணி சற்குணம் தனது புதிய படாத்திற்கு விக்ரம்  நடிக்கிறார் .இந்த படாதிற்கு அவர் வைத்திற்கும் பெயர்
கோபத்தை கொஞ்சுகிறேன்.


கோபத்தை எப்படிதான் கொஞ்ச போரங்களோ................

ஏக் தீவானா தா - கௌதமை கலாய்க்கும் மும்பை ஊடகங்கள்

கௌதம் வாசுதேவ மேனனின் ஏக் தீவானா தா நேற்று வெளியானது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌‌ரீமேக்கான இதனை மும்பை ஊடகங்கள் எதிர்கொண்டிருக்கும் விதம் மிக மோசமானது.

விண்ணைத்தாண்டி வருவாயா தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்ற படம். ஒரு மொழியில் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் வெற்றிபெறும் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல் கலா‌ச்சார வித்தியாசத்தில் அப்படம் ஜனங்களுக்குப் பிடிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. எஸ்.ஜே.சூர்யாவின் குஷி தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றது. அதே படம் இந்தியில் தோல்வியடைந்தது. இடுப்பைப் பார்த்ததால் ஏற்படும் காதலர்களின் ஈகோ யுத்தம் தமிழுக்கும், தெலுங்குக்கும் உறுத்தாமல் இருந்தது. இந்தியில் அது எடுபடவில்லை. இடுப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதை பார்ப்பது தவறுமில்லை.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சில அம்சங்கள் மாடர்ன் மும்பைக்கு பொருந்தக் கூடியதல்ல. கதாநாயகியைவிட நாயகன் ஒரு வயது சிறியவன் என்பதும், விருப்பம் இருந்தும் நாயகி நாயகனுடன் செல்லாமல் அவனை தவிர்ப்பதும், இதெல்லாம் ஒரு காரணமா என்று நினைக்க வைப்பவை. இடைவேளைக்குப் பின் கதாநாயகியை பிடித்தாட்டும் குழப்பம் எந்த மொழி ரசிகனுக்கும் சிறிது எ‌ரிச்சலை தரவே செய்யும்.

இவையெல்லாம் ஏக் தீவானா தா படத்தின் சிறு குறைகள். ஆனால் இதனை மும்பை ஊடகங்கள் அளவுக்கதிகமாக‌பெ‌ரிதுப்படுத்தியுள்ளன என்றே தோன்றுகிறது. இந்த இடத்தில் தமிழ் கலைஞர்களின் மீது அவர்கள் காட்டும் காழ்ப்பையும் குறிப்பிட்டாக வேண்டும். தமிழகலைஞர்களையும், அவர்கள் படங்களையும் பாலிவுட் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டாலும் மும்பை ஊடகங்கள் அதனை ஒத்துக் கொள்வதாய் இல்லை. தமிழிலிருந்து செல்லும் ஒருவனை மட்டம் தட்ட அவை எப்போதும் தயாராக உள்ளன. விதிவிலக்கு ரஹ்மான். ரஹ்மானின் சர்வதேச புகழ் எளிதில் அவர் மீது கை வைக்கும் துணிச்சலை மும்பை ஊடகங்களுக்கு தருவதில்லை.

ஆனால் இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதிய பலரும் ரஹ்மானின் இசை ஒன்றுமில்லை என்ற ‌ரீதியில் எழுதியுள்ளனர். அதேபோல் கௌதமை மட்டம் தட்டுவதற்காக Mediocre Maniratnam Stuff என்று எழுதுகிறார் ஒருவர். கௌதமின் படத்தில் ஒளிப்பதிவு எப்படி இருக்கும் என்பது நமக்கு‌த் தெ‌ரியும். ஏக் தீவானா தா படத்தின் சிறப்பம்சங்களாக இணைய விமர்சகர் ஒருவர் ஒளிப்பதிவை குறிப்பிடுகிறார். இன்னொருவர் ஒளிப்பதிவை அமெச்சூர் என வர்ணிக்கிறார். 
 இன்னொரு பெண் விமர்சகர் படத்தை விட்டுவிட்டு நாயகியின் உடை எப்படி இருக்க வேண்டும், தோல் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதுகிறார். அந்த விமர்சனம் முழுக்க ஒரே உளறல். எமி ஜாக்சனின் தோல் நிறத்தை டி‌ஜிட்டலில் மாற்றியிருப்பதாக அவர் எழுதுகிறார். எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்கார பெண் என்பதுகூட அவருக்கு‌த் தெ‌ரியவில்லை. அதேபோல் தென்னிந்திய பெண்கள் எண்ணெய் தேய்த்து முடியை ஜடை போட்டிருப்பார்கள் அல்லது கொண்டை போட்டிருப்பார்கள். அப்படி இல்லாமல் மலையாளப் பெண்ணாக வரும் எமி ஜாக்சன் தலைமுடியை மும்பை பெண்களைப் போல் பறக்க விட்டிருக்கிறார் என இன்னொரு உளறல். இவர்கள் இருப்பது ஆப்பி‌ரிக்காவிலா இல்லை இந்தியாவிலா? தென்னிந்திய பெண்கள் ஷாம்பு பயன்படுத்த மாட்டார்கள் என்ற அளவில்தான் இவர்களின் உலக அறிவு இருக்கிறது. இவர் அப்படத்துக்கு தந்திருப்பது ஒரு ஸ்டார். இன்னொரு விமர்சகர் மைனஸ் ஒரு ஸ்டார் தந்திருக்கிறார். இப்படியொரு ரேட்டிங் இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்.

மும்பை சினிமா மல்டி பிளிக்ஸ்களை நம்பத் தொடங்கிய பிறகு அவற்றின் முகமே மாறிவிட்டது. அதீத காமம், அதீத வன்முறை என்று மென்மையான உணர்வுகளை அவர்கள் இழந்து வருகிறார்கள். சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற படங்களே இதற்கு சான்று. காதலைச் சொல்ல ஒருவன் தயங்குவது அவர்களைப் பொறுத்தவரை பேடித்தனமாக‌த் தெ‌ரிகிறது. அதே நேரம் முன் பின் தெ‌ரியாத ஒருவனுடன் நாயகி படுக்கையை பகிர்ந்து கொண்டால் அவள் மாடர்ன் கேர்ள், 21ஆம் நூற்றாண்டின் நாக‌‌ரிக மங்கை. நான்கு ஸ்டார் ரேட்டிங் தாராளமாகக் கிடைக்கும். இந்த போலியான உலகத்திற்குள் இருப்பவர்களால் தென்னிந்திய பெண்கள் எண்ணைய் தலையுடன்தான் தி‌ரிவார்கள், தோலை டி‌ஜிட்டலில் ஆல்டர் செய்திருக்கிறார்கள் என்று கற்பனை பிம்பத்தில்தான் கதைவிட முடியும். எதார்த்தத்தை இவர்களால் ஒருபோதும் த‌ரிசிக்க முடியாது.

பின் குறிப்பு - இந்தியில் டோபி காட், யுடான் போன்ற நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் இதில் குறிப்பிடுவது கமர்ஷியல் படங்களைத்தானே தவிர இவற்றையல்ல. மேலும் இந்த விமர்சகர்கள் ஏக் தீவானா தா மோசம் என்று காட்டுவதற்கு உதாரணம் சொல்வது டோபி காட், யுடான் போன்ற படங்களையல்ல. யாஷ் சோப்ரா போன்றவர்களின் சைக்கோ படங்களையே.

Monday, February 13, 2012

விஜய்யின் விடுமுறை கொண்டாட்டம்

பெப்சி, தயா‌ரிப்பாளர்கள் சங்க கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது நடிகர்களுக்கு பல வகையில் வசதியாகிவிட்டது. சிலர் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் டூர் கிளம்பியிருக்கிறார்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பது நடிகர் விஜய்.

நடிப்பதற்கு அடுத்து விஜய்க்கு சந்தோஷமான விஷயம் ரசிகர்களை சந்திப்பது. ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் விஜய் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விஜயம் செய்வார். ரசிகர்களை சந்திப்பார், ஏழைகளுக்கு உதவிகள் செய்வார்.

இந்தமுறை நண்பன் வெளியாகியிருக்கிறது. விஜய் கே‌ரிய‌ரில் முக்கியமான படம். அதனால் உற்சாகமாக தனது பயணத்தை தொடர்கிறார். பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நண்பன் பாட்டு பாடி அவர்களை மகிழ்வித்தவர் மதுரை தங்க‌ரீகல் திரையரங்குக்கும் சென்றார். ரசிகர்களை சந்தித்தார். மனவளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவிகளும் வழங்கினார்.

விருதுநகர் அப்ஸரா திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசியவர், சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நண்பன் மூலம் நிறைவேறியது என்றார். நண்பன் படமும், விஜய்யின் விஜயமும் அவரது இமேஜமேலும் உயர்த்தியிருக்கிறது. 
thanks webdunia 

S j சூர்யாவின் புதிய படம் :



வலி,குஷி,நியூ,அ ஆ,புலி(தெலுங்கு) ஆகிய  படங்கலை இயக்கிய சூர்யா ஆடுத்து இசையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார்.

படத்தின் தலைப்பு “இசை “என்று வைத்துள்ளாராம் .இந்த படத்தில் சூர்யா music director ஆக நடிக்கிறாராம் .
மும்பையை சேர்ந்த ஒரு பெண் ஹீரோஇன் ஆக நடிக்கிறாராம் .
S j சூர்யாவின் வலக்கமான இசை அமைப்பாளர் a r ரகுமான் இந்த படாதிற்கு இசை அமைக்க வில்லயாம் அதற்கு பதிலாக சூர்யாவே இந்த படாதிற்கு இசை அமைக்கிறாராம் .
இந்த படம்  ஆகஸ்ட்15 இல் வெளியாகிறது.

Sunday, February 12, 2012

விக்ரமுக்குப் பதில் விக்ரம் பிரபு?

சற்குணத்தின் புதிய படம் கோபத்தை அள்ளி கொஞ்சுகிறேனில் யார் நடிக்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விக்ரம் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இம்மாத இறுதியில் நடக்கும் படத்தின் கதை விவாதத்தில் அவர் கலந்து கொள்வார் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தில் நடிப்பது விக்ரம் அல்ல, விக்ரம் பிரபு என்று கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகர் பிரபுவின் மகன்தான் இந்த விக்ரம் பிரபு. தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சற்குணத்தின் கோபத்தை அள்ளி கொஞ்சுகிறேன் படத்தில் நடிப்பார் என்கிறார்கள். சற்குணமோ, விக்ரம் பிரபுவோ இது குறித்து தெ‌ரிவித்தால் மட்டுமே உண்மை தெ‌ரியவரும். 
source:webdunia 

Thursday, February 9, 2012

ஹீரோ சம்பளத்திற்கு இணையான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் :

சில்வர் லைன் பிலிம்ஸ் மீகபேரிய பட்ஜெடில் உருவாகும் படம் தான் கரிகாலன் இதில் விக்ரம் கரிக்கலா சோலன் மன்னனாக  நடிக்கிறார் மற்றும் நான்கு ஹீரோஇன்கள்  இந்த படத்தில் உள்ளனர்.

LI.கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார் மற்றும் G.V.பிரகாஷ் இசை அமைக்கிறார்.


இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்காண செலவு விக்ரம் சம்பளத்திற்கு இணையாக உள்ளதாம்.


ஆயிரம் யானைகளை கொன்றவன் தான் கரிக்கலா மன்னன்.

வேலாயுதம் - ஒரு பாசாங்கு போஸ்டர்

வேலாயுதம் நூறாவது நாள் போஸ்டரைப் பார்த்த போது ‌ரீல் விடுவதில் சினிமாக்காரர்களை மிஞ்ச ஆளில்லை என்பது தெ‌ளிவாகப் பு‌ரிந்தது. நான்காவது வாரத்திலேயே இழுத்து மூடப்பட்ட இந்தப் படம் நூறு நாட்கள் - அதுவும் பதினைந்து தியேட்டர்களில் ஓடியதாக போட்டிருக்கிறார்கள். இதில் அனேகமாக எல்லா திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படத்தை நூறு நாட்களுக்கு முன்பே தூக்கிவிட்டார்கள். பிறகேன் இந்த வீண் ஜம்பம்?

WD
விஜய்யின் வேலாயுதம் மட்டுமின்றி அமோக வெற்றி என்று சொல்லப்பட்ட காவலனும்கூட பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம்தான். அதற்கு முந்தைய வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற அரை டஜன் ப்ளாப்கள் அனைத்துத் தரப்பின‌ரின் பாக்கெட்டையும் கிழித்தது. இத்தனைக்குப் பிறகும் தயா‌ரிப்பாளர்கள் விஜய்யை பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாகதான் பில்டப் கொடுத்து வருகிறார்கள். வேலாயுதம் போஸ்ட‌ரில் இது வெட்ட வெளிச்சம்.

ர‌ஜினிக்குப் பிறகு அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஹீரோவாக விஜய்யே இருந்தார் என்பது தொலைதூர உண்மை. தோல்வியடைந்த வேலாயுதம், காவலன்கூட பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருக்க வேண்டியது. அதனை தடுத்தது சந்தேகமில்லாமல் விஜய்யின் சம்பளம். நாற்பது கோடி பட்ஜெட்டில் பதினைந்து பதினெட்டு கோடி விஜய்யின் சம்பளத்துக்கே ச‌ரியாகிவிடுகிறது. இந்த சம்பளத்தைக் குறைத்தால் பட்ஜெட்டும் முப்பதுக்குள் வந்துவிடும். லாபமும் அனைவரையும் சென்றடையும்.

ஹீரோக்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தால் தயா‌ரிப்பாளர் அதிக விலைக்கு படத்தை விநியோகிக்க வேண்டியுள்ளது. தியேட்டர்க்காரர்கள் ஒரு லட்சம் வசூலிக்கும் படத்துக்கு ஐந்து லட்சம் அழுகிறார்கள். இதனை ஈடுசெய்ய முதல் ஒருவாரம் டிக்கெட் ராக்கெட் விலைக்கு விற்கும். ரசிகனுக்கு வேறு வழியில்லை, திருட்டு விசிடி தான் ஒரே விமோசனம்.

திரைப்பட வர்த்தகத்தை சீட்டுக்கட்டாக கலைக்கும் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்காமல் அவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் வெற்றி நாயகன் பெயி‌ண்ட் அடிக்கிறார்கள். இதனால் அவர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஏறுகிறது. இவர்களுக்கே இவ்வளவா என்று தொழிலாளிகளும் உழைப்புக்கு மீறிய சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள்.

FILE
நண்பன் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படம்தான். அதனை விஜய்யின் சம்பளமும், ஷங்க‌ரின் சம்பளமும் பதம் பார்த்திருக்கிறது. பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இவர்களின் சம்பளம் என்றால் லாபத்துக்கு எங்கே போவது. நகரங்களில் அதுவும் மல்டிபிளிக்ஸில் லாபம் தந்த இப்படம் தனி திரையரங்குகளில் இரண்டாவது வாரமே காற்று வாங்கியது. சி சென்டர் பற்றி சொல்லத் தேவையில்லை. கன்னியாகும‌ரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் ஊர் பனச்சமூடு. இங்குள்ள திரையரங்கில் நண்பனை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டார்கள். முதல் நாள் நூறு ரூபாய் வைத்து ஓட்டியதால் பதினேழாயிரம் ரூபாய் வசூல். அடுத்த நாள் டிக்கட் விலையை குறைத்தும் கலெக்சன் பணால். முப்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் வரும் என புலம்பிக் கொண்டிருக்கிறார் திரையரங்கை லீசக்கு எடுத்து படத்தை ஓட்டியவர். இதே நிலைதான் பல இடங்களில்.

இந்த நிலையில் நண்பனைவிட சுமார் வெற்றியான வேலாயுதத்துக்கு நூறு நாள் பாசாங்கு போஸ்டர் எதற்கு? விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா? விஜய் என்ற மாஸ் ஹீரோவின் நிலையே இப்படி என்றால் யங் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, சின்ன தளபதி படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மேக்கப்பில் முகத்தை மறைப்பவர்கள் போஸ்ட‌ரில் தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். தெய்வத்திருமகள் சென்னையில் மட்டும் நன்றாகப் போனது. அதுவும் புறநக‌ரில் புலம்பல்தான். அனேகமாக எல்லோருக்கும் தோல்வியை தந்த இந்தப் படத்திற்கு பதினைந்து நாட்களில் மூன்று வெற்றி விழாக்களை எடுத்தார்கள். எதற்கு இந்த பொழப்பு?

ஓடாத படத்துக்கு நூறு நாள் போஸ்டர் அடிப்பது, வெற்றிவிழா எடுப்பது என்று கற்பனையில் காலம் தள்ளுகிறார்கள் நமது கதாநாயகர்கள். இவர்கள் படங்களின் பட்ஜெட்டையும் படத்தின் கலெக்சனையும் தியேட்டர் வா‌ரியாக வெளியிட்டு இவர்களின் போஸ்டர் பிம்பத்தை கலைத்தால் தானாக திரையுலகம் உருப்படும்.

Tuesday, February 7, 2012

அஜித்தின் அடுத்த படத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா

பில்லா2 கு அப்புறம் அஜீத் இரு பாடகளில் நடிக்க உள்ளார்
 சிறுதை சிவா மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கதில் நடிக்க இருக்கிறார் நம்ம தல .

இதில் விஷ்ணுவர்தன் இயக்கதில் அஜீதுடன் சேர்ந்து ஆர்யா நடிக்க இருக்கிறாராம் .இதில் நயன்தாரா ஹீரோஇன் என்று ஏற்கனவே முடிவு செய்யபட்டுள்ளதாம்.

இது பற்றி அஜீதிடம் கேட்டபோது ,இளம் ஹீரோக்களிடம்
நடிக்க பெருமபடிக்கிறேன் என்றாராம் நம்ம தல.