தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக...

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபை...

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

Friday, October 26, 2012

வெற்றி தரும் ஸ்லோகம்


அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.


Tuesday, May 15, 2012

சித்தர்கள் குறிப்பு:

தமிழ் மண்ணின் பொக்கிசங்களாக போற்ற பட வேண்டியவர்கள் சித்தர்கள் , உலகமே இன்று கொண்டாடபடும் யோகக் கலையின் பிதாமகன்கள் .
இத்தகைய சித்த புருஷர்கள் தங்கள் யோக பலத்தால் செய்த சாகசங்களும்,வாழ்ந்த காலங்களும் நம்மால் நம்ப முடியாத உண்மைகள்.

காலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தூம்,ரசவாதத்தினால் இரும்பை பொன்னாகியும்,கூடு வீடு கூடு பாய்ந்தும்,மூச்சடக்கி விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வாசபடித்தியும் பலவாறாக அதிசிய சாதனைகளை புரிந்து இருகிறார்கள்


இயற்கைக்கு மாறான பல அற்புதங்களையெல்லாம் செய்த வல்லவர்கள் ; வெறும் சித்து விளையாட்டோடு நிற்கவில்லை யோகம்,அறிவு,வைத்தியம் போன்ற பல அறிய
பெரிய விஷயங்களை நமது நன்மைக்காக அருளி செய்திருக்கிறார்கள் .இவர்கள், நம் பிறப்பின் நோக்கத்தை நமக்கு அறிவித்து, நம்மை நல்வலிப்படுத்தி இறைவனுடன் இனிதாக இணைத்து வைக்க வேண்டி தோன்றிய அவதார புருஷர்கள்.
பார்போற்றும் பதினெட்டு சித்தர்கள் பெயர்கள்  :
1.திருமூலர்
2.போகர்
3.கருவூரார்
4.புலிப்பாணி
5.கொங்கனர்
6.அகப்பேய் சித்தர்
7.சட்டைமுனி
8.சுந்தரானந்தர்
9.தேரையர்
10.கோரக்கர்
11.அகத்தியர்
12.பாம்பாட்டி சித்தர்
13.சிவவாக்கியர்
14.உரோமரிசி
15.காகபூசன்டர்
16.இடைக்காட்டு சித்தர்
17.குதம்பை சித்தர்
18.பதஞ்சலி முனிவர்.  

Sunday, May 13, 2012

இராமரின் சரிதை (அ) இராமவரலாறு

ஏற்றதால பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியை தசரத மாமன்னார் ஆண்டு வந்தார். குறித்த காலத்தில் அயோத்தியின் அரசுரிமை இலந்த மரஉரி தரித்து மனைவி சீதைஉடனும் அன்பு தம்பி இலக்குவனுடனும் கானகம் எகீனான் .கங்கையை கடந்து கால் நடையாக வரும் போலுது இலக்குவனை கண்ட ராவணன் தங்கை சூர்ப்பனகை ,இவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தால்.இலக்குவனை நெருங்கிய சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விட்டான் .இதை சூர்ப்பனகை வாயிலாக கேள்வியுற்ற ராவணன் ராமன் இலக்குவன் இருவரையும் வஞ்சம் தீர்க்க சீதையை சிறை எடுத்து இலங்கைக்கு சென்று விட்டான்.பல நாட்கள், பல மாதங்கள் கடந்து சீதையை காணாது தவித்த ராமர் இலக்குவனர் தமிலக எல்லைக்குள் வந்தார்கள் .இறுதியாக ராமநாதபுரம் வந்து விட்டனர்.இவ்வாறாக ராமரை ராம அவதாரமும் ,ராம அவதாரம் ராமநாதபுரம் என முறுவியது.

ராமநாதபுரத்தில் தங்கி இருந்த வேலையில் தனது வேலை ஆட்களை நான்கு திசையிலும் ராமர் அனுப்பி தேடி கண்டு பிடித்து வருமாறு அன்பு கட்டளை இட்டார் .கட்டளையை சிரமேற் கொண்டு வேலை ஆட்கள் நாலாபுரமும் தேட ஆரம்பித்தனர்.அவர்களில் ஒருவரே அஞ்சிநேயர்(அனுமான்) ஆவார்.விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் படைத்த ஆஞ்சநேயர், பாம்பன் பகுதிக்கு (தற்போது பாம்பன் புகைவண்டி நிலையதிற்கு தெற்கே உள்ள பகுதி) குந்துக்கால்செய்து தனது உருவத்தை விஸ்வரூபம் எடுத்துள்ளார் .அவரது தலை+மண்+ஆறு (தலைமன்னார்) தனுகோடிக்கு கிலக்கே சுமார் 25 கி.மீ தூரத்தில் கடலுக்கு அப்பால் உள்ளது.1964 புயலுக்கு முன் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாற்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது. 
தற்போது இல்லை.இவ்வாறாக ஆஞ்சநேயர்
குந்துகாலிட்டு  விஸ்வரூபம் எடுத்தபோது,அவரது வால் நோக்கி இருந்த இடமே வாலிநோக்கம் என்பதாகும் தற்போது அங்கு கப்பல் உடைக்கு தளமாகவும் கடல் நீரை நண்ணீராக்கும் ஆளையும் செயல் பட்டு வருகிறது.

மேலும் சீதை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்த போது ஆஞ்சநேயரை நோக்கி சிவலிங்கம் பூஜை நடத்த  வேண்டும் அதற்கு லிங்கம் தேவைபடுகிறது என்று கூறினால் சீதை. அதை கேட்ட அனுமான் இதோ ஒரு நொடியில் வருகிறேன் தாயே”, என கூறி பறந்தார். ஆஞ்சநேயர் தாமதம் ஆனதால் ,அவசரபட்டு அன்னை சீதை கடற்கரை மண்ணை லிங்கமாக பிடித்துவைத்தாள். ஆஞ்சநேயர் லிங்கத்தை கொண்டு வந்தார்.அன்னை சீதை நோக்கி “அன்னையே அவசரபட்டு கடல் மண்ணை லிங்ககமாக பிடித்து விட்டீர்களே  என வருத்தபட்ட ஆஞ்சநேயரை நோக்கி சீதை “சரி நீ கொண்டு வந்த லிங்கத்தயே வணகுகிறேன்.உன்னால் முடிந்தால் மண் லிங்கத்தை பிடிங்கி எரிந்து வீடு”,என சீதை கூறினால்.மறுகணமே ஆஞ்சநேயர் தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பிடுங்க முயற்சிகையில் வால் அரூந்து  சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விலுந்துள்ளார்.அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.

இவ்வாறாக அன்றயே காலந்தோட்டு இன்று வரை, பாம்பன் தென்பகுதி குந்துக்கால் என்றும்,இலங்கயில்யுள்ள
தலைமன்னாரும் சாயல் குடியிலிர்ந்து சில கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வாலி நோக்கம் என்ற இடமும் ஆகும்.மேற்கண்ட சரித்தரசான்றுகளுடன் ராமரின் கதை அமைதுள்ளதால் ,ராமாயணம் இதிகாசம் இல்லை .ராமர் சரிதை (அ) ராமர் வரலாறு என்பதே சரி.
                                                                          
                            திரட்டியவர்:    
                                 பொன்.களங்சியம் 
                                 ஓய்வு தலைமை ஆசிரியர்
                                 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி
                                 மண்டபம்
                                   ராமநாதபுரம் மாவட்டம் .

Saturday, May 12, 2012

கலியுகம் பிறந்து அரசுரிமை கட்டங்கள் வருஷங்கள்

1.பரிசித்து -500 வருடங்கள்
2.ஜெனமே ஜெயம்-300 வருடங்கள்
3.நரேந்திரன் -200 வருடங்கள்
4.பாலசந்திரன் -95 வருடங்கள்
5.சாரங்கன் -120 வருடங்கள்
6.சுனிதன்  -100  வருடங்கள்
7.விக்ரமாதித்தன் -2000 வருடங்கள்
8.போஜராஜன்   -83 வருடங்கள்
9.காலியன் – 380 வருடங்கள்
10.அப்பாஸீ -500 வருடங்கள்
11.கர்த்தார்கள்  -475 வருடங்கள்
12.முகமதியன் -95 வருடங்கள்
13.வெள்ளைப்பேண் -60 வருடங்கள்
14.வெள்ளையன் -140 வருடங்கள்
15.காங்கிரஸ் -17  வருடங்கள்  
கலியுகம் பிறந்து சித்திரை மாதம் வெள்ளிக்கிலமை நவமி திதி மூல நட்சதிரம் ஷை வரதை முன்னிட்டு அரசாங்கத்தால் சித்திரை மாதம் முதல் ஒரு வாரத்திற்குள் முதல் (புது) வெளிக்கிலமை விடுமுறையாகும்.
      (ஞாசராமக்கலை –வெள்ளையாரை குறிக்கும்)
கலியுகம் பிறந்து 5067 வது வருடம் நடதேறிவருகிறது.பரிசித்து அன்று முதல் இன்று வரை 15வது காங்கிரஸ் நடந்தேறி வருகிறது.

                                  திரட்டியவர்:   
                                         பொன்.களங்சியம் 
                                         ஓய்வு தலைமைஆசிரியர்
                                         ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி
                                          மண்டபம்
                                          ராமநாதபுரம் மாவட்டம் .

Wednesday, April 25, 2012

Tuesday, April 24, 2012

விரைவாக காப்பியாக என்ன செய்ய வேண்டும்:

பொதுவாக காப்பி என்பது சற்று தாமதமாக தான் ஆகும்.
சான்றிற்கு SYSTEM TO  CD-கு காப்பி செய்தால் தாமதமாக காப்பி ஆகும்.அதேபோல் SYSTEM TO PENDRIVE காப்பி ஆகும்போது விரைவாக ஆகும்.SYSTEM-குள்ளயே காப்பி பேஸ்ட் செய்யும் பொது விரைவாக ஆகும்.SYSTEM-கூல் வைரஸ் ஏதேனும் இருந்தால் SYSTEM-குள் காப்பி பேஸ்ட் செய்யும் போதும் மற்றும் SYSTEM TO மற்றொரு சாதனதுக்கு காப்பி செய்யும் போதும் கூட வேகம் சற்று குறைவாகதான் இருக்கும்.சரி, இப்போது ஃபைல் போல்டெர்களை அடங்கிய தகவல்களை மிகவும் விரைவாக காப்பி செய்வதற்கு ஏதேனும் சாஃப்ட்வேர் உள்ளதா என்றால் ,கண்டிப்பாக உள்ளது என்றே சொல்லலாம் .கூகிள்க்கு சென்று டெரா காப்பி (tera copy) அடித்தால் டெரா காப்பி சாஃப்ட்வேர் இலவசமாக கிடைக்கும்.

 அதனை டவுண்லோட் செய்து system-இல் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.பிறகு எந்த ஃபோல்டர் காப்பி செய்ய வேண்டுமோ அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்தல் டெரா காப்பி என்ற பெயரோடு ஒரு வரி இருக்கும். அந்த வரியை கிளிக்செய்தல் 
டெரா காப்பிசாஃப்ட்வேர் ஓபன் ஆகும்.அவற்றில் உள்ள ஐகானில் காப்பி என்பதை கிளிக் செய்தல் காப்பியாக தயாராகி விடும்.பிறகு எங்கு வைக்கவேண்டும் என்பதையும் browse என்ற ஆப்ஷன் மூலம் தேர்வு செய்து விட்டால் விரைவாக காப்பி ஆகிவிடும்.ஒரு வேலை காப்பியாகின்ற ஃபைல்ஆனது வைரஸ் ஃபைல் ஆக இருந்தால் அவை காப்பியாகாது. ஃபைல் ஆனது காப்பியாகி முடிந்தவுடன் ரிபோர்டில் ஸ்டேட்டஸ் என்ற பிரிவில் அதன் விளக்கம் இடம்பெற்று இருக்கும் .    

ஆன்லைனில் நம் கையெளுத்து:


http://www.mylivesignature.com/mls_sigdraw.php என்ற தளத்திற்கு செல்லவும்.
புதிதாக உருவாக்குபவற்கு ஏதாவது கிறுக்கல் ஏற்பட்டால்
“start over” என்ற பட்டனை அலுத்தி கிளியர் செய்து கொள்ளலாம் .கையெளுத்து உருவாக்கியபின் “create signature”என்ற பட்டனை அலுத்தி உங்கள் கையெலுத்தை உங்கள் கம்ப்யூட்டரில் படமாக சேமித்து வைத்துகொள்ளலாம்

பெரிய கோப்புகளை அனுப்ப SENDUIT :

நீங்கள் பெரிய அளவு கொண்ட கோப்புகளை இணையம் வலியாக அனுப்ப வேண்டி இருக்கிறதா ? மின்அஞ்சல் இது மாதிரியான வேலைகளுக்கு உதவுவது கடினம் .என்னதான் விதவிதமான சேவைகள் வலங்குகிறோம் என்று மின்அஞ்சல் சேவை அளிப்பு நிறுவனங்கல் கூறிக் கொண்டாலும் கோப்பின் அளவு என்று வரும் பொது தயக்கம் காட்டவே செய்கிறார்கள்.

நீங்கள் 100 எம்‌பி வரையிலான கோப்புகளை எளிதாக அனுப்பி வைக்க வேண்டுமா?SENDUIT இணையதளம் உங்களுக்கு கை கொடுக்கும் .நீங்கள் விரும்பினால் பயன்படுத்திய கோப்புகளை எப்போதும் நீக்கிவிட வேண்டும் என்பதையும் சொல்லிவிடலாம் .ஒரு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரையிலான கால அளவைத் தேர்தேடுக்கவும் .
தள முகவரி:www.senduit.com   

Monday, March 19, 2012

தாஉத் இப்ராஹிம் கூட்டாளி பங்களோ ரூ 7.5 கோடிக்கு ஏலம்.


மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் முக்கிய இடமான சியாமளா ஹீல்ஸ் பகுதியில் நடிரா காலனி உள்ளது.இங்குதான் தீவிரவாதி தாஉத் இப்ராஹிம் நெருங்கிய கூட்டாளியாக கருதபாடும் கடத்தல் மன்னன் இக்பால் மிர்ச்சி தனது அயல்நாட்டு மனைவி பெயரில் 1991-ம் ஆண்டு 8343 சதுர அடி கொண்ட மிகப்பெரிய பங்களோ ஒன்று வாங்கினார்.

இந்த பங்களோ 2004-ம் ஆண்டு முதல் யாரும் குடியிருக்காமல் காலியாக இருந்துளது .இந்தநிலையில் ,சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இந்த பங்களோவை சுங்கவரிதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .இதை  ஆடுத்து ,கடத்தல் மற்றும் அன்னியசெலவாணி காட்டு  பங்களோவை ஏலத்திற்கு விட்டனர் .இதற்காகவே ,இந்த அதிகாரிகள் மும்பையில் இருந்து இங்கு வந்தனர்.

மும்பையை தலைமயீடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று ரூ .7.5 கோடிக்கு இந்த பங்களோவை ஏலத்திற்கு எடுத்தது .இதற்கு முன் 2007-ம் ஆண்டு நடந்த ஏலத்தின்போது ,இக்பால் மிர்ச்சின் அச்சுறுதல் காரணமாக ,இந்த பங்களோ ஏலம் விடும் பணி நடைபெறாமல் போனது குறிபடதக்கது .