Tuesday, December 20, 2011

சந்தையை கலங்கடிக்க வரும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லட்!

ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் சந்தையில் பட்டையைக் கிளப்புகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கு அமோக வரவேற்பு இருப்பதால், தற்போது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் டேப்லெட்டுகளின் படையெடுப்பும் அதிகரித்துவிட்டன. அந்த வரிசையில் தற்போது ஸ்கைபேட் ஆல்பா 2 டேப் என்ற புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆன்ட்ராய்டு குடும்பத்தில் புதிதாக இணைந்திருக்கிறது.

இந்த ஸ்கைபேட் ஆல்பா 2 டேப் பக்காவான செயல் திறன் கொண்டது. இதன் டிசைன் சூப்பராக உள்ளது. இதன் ப்ராசஸர் 1.2 ஜிஹெர்ட்ஸ் எஆர்எம் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர் ஆகும். இந்த டேப்லெட் மாலி 400 க்ராபிக்ஸ் ப்ராசஸிங்கை சப்போர்ட் செய்யும். அதனால் இதில் எச்டி 1080பி வீடியோவை இந்த டேப்லட்டில் இனிமையாக அனுபவிக்க முடியும்.

இந்த புதிய டேப்லெட் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி வீடியோ பைல்களை சப்போர்ட் செய்யும். இதில் உள்ள வி1.4 எச்டிஎம்ஐ அவுட்புட் மூலம் இந்த டேப்லெட்டை எச்டி டிவிக்களில் இணைக்க முடியும். அதனால் எச்டி மற்றும் 3டி வீடியோக்கள் மிகவும் பெரிதாகத் தெரியும்.

இந்த ஸ்கைப்பேட் ஆல்பா 2 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களை சுருக்கமாகப் பார்த்தால் அது சூப்பரான மெல்லிய டிசைனைக் கொண்டுள்ளது. இதன் 7 இன்ச் கெப்பாசிட்டிவ் மல்டி டச் தொடு திரை பக்காவாக உள்ளது. தாறுமாறான வேகத்திற்காக இந்த டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் எஆர்எம் கார்டெக்ஸ் ஏ8 ப்ராசஸரைக் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது. அதுபோல் இணைப்பு வசதிகளுக்காக மினி யுஎஸ்பி வி2.0 ஒடிஜி போர்ட் கொண்டுள்ளது. மேலும் 3.5மிமீ ஹெட்போன் ஜாக்கும் இதில் உண்டு. இதன் முன்புறம் உள்ள கேமரா இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. இது மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டிருப்பதால் மைக்ரோ எஸ்டி கார்டுகள் மூலம் இதன் மெமரியை விரிவுபடுத்த முடியும்.

இந்த ஆல்பா 2 டேப்லெட் மூலம் இதை பயன்படுத்துவோர் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை அக்சஸ் செய்ய முடியும். இது ஒரு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட டேப்லெட். மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தையும் சப்போர்ட் செய்யும் என்ற செய்தியும் காதுக்கு எட்டியுள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


0 comments:

Post a Comment