Wednesday, January 11, 2012

மோதல் தீர்ந்தது: ஜீவா, சிம்பு சமரசம்

நடிகர்கள் ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் பனிப்போர் நிலவி வந்தது. இருவரும் ஒருவரையொருவர் மறைமுகமாக குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தனர். “கோ” படத்தில் இருந்து இவர்கள் தகராறு நீடித்தது. அப்படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் மறுத்ததால் ஜீவா கைக்கு போனது. “கோ” படம் ஹிட்டானதும் அதில் நடிக்க மறுத்த சிம்புவை பலரும் விமர்சித்தனர்.
சிம்பு முதுகில் குத்துவதாக ஜீவா மறைமுகமாக சாடினார். சிம்பு என் நண்பன் இல்லை என்றும் கூறினார். ஜீவா பேச்சுக்கு சிம்புவின் நெருங்கிய நண்பரான ஜெய் கண்டனம் தெரிவித்தார். நண்பன் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பிறகு அவருக்கு பதில் ஜீவா சேர்க்கப்பட்டார். இதுவும் மோதலுக்கு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் அன்பை வலியுறுத்தும் பாடல் ஒன்றை உருவாக்கி இன்டர் நெட்டில் சிம்பு வெளியிட்டு உள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிகின்றன. தொடர்ச்சியாக ஜீவா விஷயத்தில் அவருக்கு திடீர் மனமாற்றமும் ஏற்பட்டு உள்ளது. சிம்பு தனது பிளாக்கிங் சைட்டில் ஜீவாவை பாராட்டியுள்ளார். நண்பன் பட டிரெய்லர் பார்த்தேன்.
பிரமாதமாக இருந்தது. அதில் உங்கள் தோற்றமும் சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் நடித்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு ஜீவா பதில் அளிக் கையில் நண்பன் டிரெய்லர் உங்களுக்கு பிடித்து போனது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பாராட்டுக்கு நன்றி. விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இருந்த மோதல் தீர்ந்து சமரசமாகியுள்ளனர்.


0 comments:

Post a Comment