Wednesday, January 4, 2012

பிரமிக்க வைக்கும் மாற்றான் வியாபாரம்

அயன் என்ற வெற்றிப் படத்தை தந்ததுகூட பரவாயில்லை. அவ்வளவு வியாபாரமில்லாத ‌ஜீவாவை வைத்து கோ என்ற பிளாக்பஸ்டரை தந்ததுதான் கே.வி.ஆனந்தை பிரமிப்பாக பார்க்க வைத்துள்ளது.

அவ‌ரின் அடுத்தப் படமான மாற்றான் தங்களுக்கு தங்கப் புதையலை தரும் என்று நம்புகிறார்கள் விசியோகஸ்தர்கள். விளைவு?

மாற்றானின் வெளிநாட்டு உ‌ரிமை 12 கோடிக்கும், தெலுங்கு உ‌ரிமை 17 கோடிக்கும் வியாபாரமாகியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. இதுவே இப்படி என்றால் தமிழக வியாபாரம்?

படத்தை தயா‌ரித்திருக்கும் ஏ‌ஜிஎஸ் 80 கோடி இலக்கு வைத்திருக்கிறதாம். யாராவது 80க்கு இம் என்றால் மாற்றானை கைமாற்ற தயாராக இருக்கிறாராம்.


0 comments:

Post a Comment