Saturday, January 7, 2012

வயிற்றில் விரல் வளர்க்கும் இளைஞர்!

சீனாவின் லியோனிங் மாகாணத்தை சேர்ந்த இளைஞர் வாங் யாங்சூன். மரச் சாமான்கள் செய்யும் தொழிலாளி. சமீபத்தில் ரம்பம் வைத்து, மரத்தை அறுத்துக் கொண்டிருக்கும் போது, இவரது கை விரல் ஒன்று, பாதிக்கு மேல் துண்டிக்கப்பட்டது. வலியால் துடித்த வாங்கை, அருகில் இருந்தவர்கள், மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், துண்டிக்கப்பட்ட விரலால், இனி எந்த பயனும் இல்லை என்று கூறி விட்டனர்.
அந்த விரலின் எலும்பு மட்டுமே சேதமடையாமல் இருப்பதாகவும், தசை உள்ளிட்ட மற்ற பாகங்கள் முழுவதும் சேதமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். அப்போது தான் ஆபத்பாந்தவனாக வந்தார், டாக்டர் ஹுவாங். விரலின் சேதமடைந்த பகுதியை, வாங்கின் மற்ற உடல் பாகங்களைக் கொண்டே, வளர்ச்சியடையச் செய்ய முடியும் என, யோசனை கூறினார்.
இதன்படி, துண்டிக்கப்பட்ட விரலை, வாங்கின் வயிற்றில் உள்ள தசையுடன் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வயிற்றில் உள்ள தசை, துண்டிக்கப்பட்ட விரலுடன் பொருத்தப்பட்டுள்ளதால், துண்டிக்கப்பட்ட விரலு<க்கு, வழக்கம் போல் ரத்த ஓட்டம் கிடைக்கும் என்றும், விரலில் சேதமடைந்த பகுதியில் தசைகள் வளரத் துவங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் டாக்டர் ஹுவாங்.
ஓரளவு வளர்ச்சி அடைந்ததும், வயிற்றில் இணைக்கப்பட்டுள்ள விரல், அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்கப்படும். இதன்பின், வாங் வழக்கம் போல் செயல்படலாம். துண்டிக்கப்பட்ட விரல், ஏற்கனவே இருந்தது போல் இல்லாவிட்டாலும், ஓரளவு முழுமையாக இருக்கும் என்றும், டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தாவரங்கள் வளர்ப்பதை பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். சீனாவில் துண்டிக்கப்பட்ட விரலையே வளர்க்கின்றனர்.


0 comments:

Post a Comment