தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக...

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபை...

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

Tuesday, January 31, 2012

எனக்குப் பதில் சிறந்த கேப்டன் இருந்தால் வழிவிடத் தயார்- தோனி

டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை விட சிறப்பாக யாரேனும் தலைமை வகிக்க முடியுமெனில் நான் மகிழ்ச்சியுடன் வழி விடுகிறேன் என்று இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா அணிகளிடம் 8- 0 என்று தோல்வியடைந்ததையடுத்து கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் தோனியின் டெஸ்ட் தலைமை உத்தி குறித்து கடும் விமர்சனங்களை வைத்தனர்.

"தலைமைப்பொறுப்பு ஒருவருக்கானதல்ல, இப்போதைக்கு நான் தலைமை வகிக்கிறேன். இது ஒரு கூடுதல் பொறுப்பு அவ்வளவே. நான் இருக்கும்வரை ஒழுங்காக செயல்பட விரும்புகிறேன். ஆனால் அதிலேயே ஒட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு பதில் வேறொருவர் சிறப்பாக இருந்தால் அவர் தலைமையேற்கலாம்.

கடைசியில் இந்திய அணி சிறப்பாக செயல்படவேண்டும் என்பதே விருப்பம். என்னைவிட இன்னொருவர் சிறப்பாக இருந்தால் அவர் தலைமை ஏற்பதில் எனக்கு ஒன்றும் இல்லை. அது ஒன்றும் என்னுடன் ஒட்டிக் கொண்ட விஷயமல்ல.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது. நான் அதன் தேவைகளை பூர்த்தி செய்வதில் முயற்சிகளை மேற்கொண்டேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது பயணம் முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. நான் இதில் எந்த முடிவையும் எட்டவில்லை. இது தனி நபர் எடுக்கும் முடிவல்ல, மற்றவர்கள் நான் இதற்கு சிறப்பானவனா என்பதை முடிவு செய்யவேண்டும்.
 ஒரு வீரராக நான் 100% பங்களிக்கிறேன், நான் என்ன செய்கிறேனோ அதனை இன்னமும் செய்துதான் வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான கிரிக்கெட், அதற்காக பிற வடிவங்களை மதிக்கவில்லை என்று கூறமுடியாது. ஒவ்வொரு வடிவத்திலும் கிரிக்கெட் சவாலானது.

ஒருநாள் கிரிக்கெட் அணி வித்தியாசமாக உள்ளது. இங்கு சப்தம் அதிகம் இதனால் ஓய்வறைச் சூழல் ஊக்கமளிப்பதாக இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் ஆட்டம் பற்றி பேசும்போது ஓய்வறை உயிரூட்டமுள்ளதாக இருக்கும். உண்மையில் ஒரு நாள் அணி மிக மிக வித்தியாசமானது.

கிஷோர் குமாரிலிருந்து ஷான் பாலிற்கு மாறுவதுபோல் இந்த தலைமுறை வித்தியாசமானது. இது சப்தம் மிகுந்தது.

அனைத்தும் கலந்த ஒரு விஷயம் சுவாரசியமாக இருக்கும், கர்நாடக இசையிலிருந்து ராப் இசை வரை அனைத்தும் கலந்திருக்கவேண்டும்.

வயது என்பது ஒரு எண் அவ்வளவே. நன்றாக ஆடினால் வயது குறித்து சர்ச்சை எழாது. ரன்கள் அடித்துக் கொண்டேயிருந்தால் யார் வயதைப் பற்றி பேசப்போகிறார்கள்?

தற்போது ரைனா உள்ளார், கோலி இருக்கிறார், ரோஹித் ஷர்மா ஒரு திறமையான வீரர், ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்காத நிலையில் இருந்திருக்கிறோம்.

முதலில் இந்த இரண்டு இருபது ஓவர் கிரிக்கெட்டையும் வெற்றி பெறுவதுதான் திட்டம், ஒருநாள் கிரிக்கெட் பிறகு"

இவ்வாறு கூறினார் தோனி.
source:webdunia
 

ரீமேக் படங்களை இனி இயக்க மாட்டேன் - இயக்குநர் ஷங்கர்

''ரீமேகபடத்தஇயக்கியதபுதஅனுபவமாஇருந்தாலுமஇனி ரீமேகபடங்களஇயக்மாட்டேன்'' இயக்குநரஷங்கர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

என்னுடைதயாரிப்பிலவெளிவந்படங்களநன்றாஓடவில்லை எ‌ன்று ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ள ஷ‌ங்க‌ர், இதனாலபெருமநஷ்டமடைந்தேன் எ‌ன்றா‌ர்.

படமதயாரித்தநானஎன்னுடைகையசுட்டுககொண்டேன் எ‌ன்று‌ம் அதிலஇருந்தசிறிதுசிறிதாமீண்டவருகிறேன் எ‌ன்று‌ம் ஷ‌ங்க‌ர் கூ‌றினா‌ர்.

தற்போதநானஇயக்கிநண்பனபடமநன்றாஓடிக்கொண்டிருக்கிறது எ‌ன்று‌ம் இதஇந்திபபடமான 3 இடியட்ஸபடத்தினரீமேக் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ந‌ண்ப‌ன் பட‌த்‌தி‌ல் விஜயவழக்கமாபாணியிலஇல்லாமலவித்தியாசமாநடிப்பைககொடுத்தார் எ‌ன்று கூ‌றிய ஷ‌ங்க‌ர், ரீமேகபடத்தஇயக்கியதபுதஅனுபவமாஇருந்தாலுமஇனி ரீமேகபடங்களஇயக்மாட்டேனஎன்றார்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

4. கொள்ளைக்காரன்

விதார்த் நடித்திருக்கும் இப்படம் பரவாயில்லை என்ற விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 87,800 ரூபா‌ய்களை வசூலித்துள்ளது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இதன் மொத்த சென்னை வசூல் 28 லட்சங்கள்.

3. மௌனகுரு

சென்ற வார இறுதியில் 1.6 லட்சங்களை வசூலித்த இப்படம் ஆறு வாரங்கள் முடிவில் 1.47 கோடியை சென்னையில் வசூலித்துள்ளது.

2. வேட்டை

லிங்குசாமியின் இந்த லா‌ஜிக் இல்லா படம் பாக்ஸ் ஃபிஸில் பெ‌ரிய மே‌ஜிக் எதையும் நிகழ்த்தவில்லை. சுமாரான வசூல்தான். சென்ற வார இறுதியில் 25.9 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 2.6 கோடியை தனதாக்கியுள்ளது.

1. நண்பன்

மீண்டும் அதே முதல் இடத்தில் நண்பன். மற்ற இடங்களில் எப்படியோ... சென்னையில் படம் பட்டையை கிளப்புகிறது. இதன் சென்ற வார வசூல் 51 லட்சங்கள். இதுவரை இப்படம் 6.22 கோடிகளை வசூலித்துள்ளது.

Monday, January 30, 2012

பெண்களின் உணர்வுகளை அதிகரிக்கும் தியானம் – ஆய்வில் தகவல்

தியானம் செய்வது பெண்களின் காதல் உணர்வுகளை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ப்ரௌவ்ன் பல்கலைக்கழகம் ஒன்று 44 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது அந்த ஆய்வில் பங்கேற்ற 44 மாணவர்களில் 30 பேர் பெண்கள். 12 வாரங்களுக்கு தியானம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் போது அமைதி, உற்சாகமான, பாலுணர்வை தூண்டும் படங்களை காண்பிக்கப்பட்டது. அப்போது தியானப்பயிற்சி செய்த பெண்கள், ஏராளமானோர் எளிதில் உணர்ச்சி வசப்பட்டனர். மேலும் தியானம் பயிற்சி செய்த பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே தியானம் மேற்கொள்ளும் பெண்களின் கவனச்சிதறல் ஏற்படாமல் இருந்ததும் தெரியவந்ததாக டெய்லி மெயில் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவு உளவியல் பற்றிய தகவல்களை வெளியிடும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
source:oneindia

நயன்தாரா - நான்ஸ்டாப் குழப்பம்

நயன்தாரா, பிரபுதேவா திருமணம் நடக்குமா? இப்போதும் இவர்கள் காதலில்தான் இருக்கிறார்களா?

இந்த இரண்டு கேள்விகளை வைத்து இதுவரை இருபது தலையங்கத்திற்கு மேல் எழுதியிருப்பார்கள். பதில்தான் இன்னும் கிடைக்கவில்லை. சமீபத்திய செய்தி, இருவரும் நிரந்தரமாக பி‌ரிந்துவிட்டார்கள் என்பது.

நயன்தாரா சினிமாவில் மீண்டும் நடிக்கிறார், பிரபுதேவாவுடன் அவருக்கு மனஸ்தாபம் என்று சிலர் எழுதினார்கள். உடனே அதற்கு மறுப்பு வந்தது. ரவுடி ரத்தோர் படப்பிடிப்பில் பிரபுதேவாவை நயன்தாரா சந்தித்தார் என்று மறுப்பு தெ‌ரிவித்தவர்கள் இடம் பொருளுடன் விளக்கினார்கள். இந்த மறுப்பு இரண்டே நாளில் பிசுபிசுத்திருக்கிறது.

பிரபுதேவா திருணமத்தில் ஆர்வம் காட்டாமல் தனது முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பி‌ரியமாக இருப்பதால் நயன்தாரா அவரை பி‌ரிந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

இருவ‌ரில் ஒருவராவது மவுனம் கலைக்காவிட்டால் தலைப்பு செய்திகளின் எண்ணிக்கை இன்னும் கூடும். 
source:webdunia 

Thursday, January 26, 2012

நண்பன் படதிற்காக விஜய்க்கு தேசிய விருதா ?


சுமாரான படம் என்றாலே ஆக ஓகோ னும் புகல்ந்து தள்ளும் விஜய் ரசிகர்கள் ஒரு நல்ல  படம் கூடுதா சும்மா விடுவார்களா..........
நண்பன் படாதிற்காக விஜய்க்கு கண்டிப்பா தேசிய விருது
கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் இணையதலங்களில்   அனல் பரப்பி கொண்டு இருக்கிறார்கள் .
ஆஸ்கார் அவார்ட் வாங்குவார் என்று சொன்னால்  கூட ஆச்சிரியம் இல்லை  
அந்த நெக்ஸ்ட் சூப்பர் ஸ்டார்...........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நண்பனை ரசித்த கமல்

இப்போதெல்லாம் ர‌ஜினி புகழ் பாடுவதை விட்டு கமலுடன் நெருக்கம் காட்டுகிறார். யார் அவர்? வேறு யார் விஜய்தான்.

தனது நண்பன் படத்தை இவர் கமலுக்காக ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டினார். படத்தை ரசித்த கமல், விஜய்யின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார். கலெகசனை பார்க்கும் விஜய் முதல்முதலில் நடித்துப் பார்த்தப் படம் நண்பன். சூப்பர் நடிகரே பாராட்டிவிட்டார், குஷியில் இருக்கிறார் விஜய்.
source webdunia

Wednesday, January 25, 2012

சங்கர் + விக்ரம் =ஸ்பெஷல்

சங்கர் இயகத்தில் சமீபத்தில் வெளிவந்த நண்பன் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்க சங்கர் தனது அடுத்தபடாதிற்கான வேலையை தொடங்கிவிட்டார்.

இவர் அடுத்த படத்தில்  நடிக்கும் வாய்பை பெற்று உள்ளார் நம்ம சீயான் விக்ரம் .

இவர்களது கூட்டணியில் 2005இல் வெளிவந்த அந்நியன் மீகபெரிய வெற்றியை அடைதது .2005 இல் வெளிவந்த  திரைபடகளில் வசூலில் பாக்ஸ்  ஆஃபிஸ் கணக்கில் அந்நியன் இரண்டாம் இடத்தை புடித்தது 

சந்தரமுகி முதல் இடத்தை புடித்தது குறிபிடதக்கது.

இந்த வெற்றி கூட்டணி மீண்டும் சேர்ந்தால் சம்திங் ஸ்பெஷல் தான்.

Tuesday, January 24, 2012

இளைஞர்களை அழைக்கிறது கடலோர காவற்படை

ஆண்டு தோறும் தவறாது பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., தகுதியுடையவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும் கடலோர காவற்படை உதவி கமாண்டன்ட் பணிக்கான காலியிடங்கள் தற்போதும் அறிவித்துள்ளது. முழு நேரப் பணியிடமான உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் எப்போதும் இளைஞர்களுக்கான சிறப்பான வாய்ப்பாகவே விளங்கி வருகிறது. எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பணிக்கு திறமையான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பணிப் பிரிவுகள்: உதவி கமாண்டன்ட் பொதுப் பிரிவு
உதவி கமாண்டன்ட் பைலட்/நேவிகேட்டர்/அப்சர்வர்
உதவி கமாண்டன்ட் கமர்சியல் பைலட் லைசென்ஸ்
உதவி கமாண்டன்ட் டெக்னிக்கல் பிரிவு பணிப் பிரிவுகளைப் பொறுத்து உடற்தகுதிகள் மாறுபடும்.
இந்தப் பணிக்கான தேர்வு முறைகள் பின்வரும் இடங்களில் நடத்தப்படும்.
* Coast Guard Regional Headquarters (West), Worli Sea Face, PO Worli Colony, Mumbai 30
* Indian Coast Guard Distt. HQs. No 5, GM Pettai Road, Royapuram, Chennai 13
* Indian Coast Guard Air Squadron 700, Naval Transmitting Station, Military Camp,Bagjola,
Private Road, Dumdum (Near Nagerbazar) Kolkata 74
* Indian Coast Guard Selection Board, A1, Sector 24, Noida, Opposite HCL Technologies, Dist Gautam Budh Nagar, UP 201 301
சம்பளம்: ரூ.15600லிருந்து ரூ.39100 வரை.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களரிய பார்க்க வேண்டிய இணைய தள முகவரி http://indiancoastguard.nic.in /indiancoastguard/jobs/AC_02_2012/FINAL%20ADV%20ASST%20COMDT%20BATCH.pdf
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 30, 2012.
source:dinmalar

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

4. மௌனகுரு
சென்ற வாரத்தின் அதே நான்காவது இடத்தில் மௌனகுரு. இதுவரை சென்னையில் 1.42 கோடியை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 3.3 லட்சங்களை வசூலித்துள்ளது.

3. கொள்ளைக்காரன்
விதார்த் நடித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 5.7 லட்சங்களை வசூலித்துள்ளது. பத்து தினங்களில் இதன் வசூல் 24 லட்சங்கள்.

2. வேட்டை
லிங்குசாமியின் படம் சென்ற வார இறுதியில் 63.7 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 1.91 கோடி.

1. நண்பன்
கடைசியில் விஜய்க்கு ஒரு சூப்பர்ஹிட் படம் கிடைத்திருக்கிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 1.38 கோடி வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் மட்டும் 4.95 கோடிகள்.
source:webdunia

ஹாலிவுட் ஸ்டைலில்..,,அஜீத் படம்

அஜித்தை இயக்கப் போகும் சிறுத்தை சிவா,இப்போது செம குஷியில் இருக்கிறார் .அஜீத்க்கு இவர் சொன்ன முதல் கதையே பிடித்து போக ,திரைக்கதையே உருவாக்கதொடங்கிவிட்டார். 

“எந்த மாதிரியான அஜித்தை திரைக்கு தரபோகிறிகள்?”
இயக்குனரை கேட்டால் ,”பிரபல ஹாலிவுட் நடிகர்கள் ஸ்டைலலை அஜீத்திடம் பார்க்கிறேன் .இந்த ஸ்டைலுக்கு  
ஏற்ற விதத்தில் ஏன்  இயக்கதில் அவரை பார்க்கலாம் .அதற்கான திரைகதையை உருவாக்க தொடகும்போதே ஸ்டைலான அஜீத் ஏன்  மனதிரைக்குள் வந்து விட்டார் ....”
என்றார்.               
ஆக, சிங்கத்தை அலகு படுத்த போகுது சிறுத்தை  

Sunday, January 22, 2012

போதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் .....

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் ஆண்களில் சிலர் ஜம் மென்று அழகாக காட்சியளிப்பர். அதைப்பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்கவைத்துக்கொள்ள என்னதான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு. பெண்களுக்கு மட்டும் தான் அழகு குறிப்பா? எங்களுக்கெல்லாம் கிடையாதா என்று ஏங்கும் ஆண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்.

நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது இளமை நீடித்திருக்கும். பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவிகிதம் கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.

ஆண்கள் அதிக அளவில் சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் சருமம் பாதிக்கப்படுகிறது. எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, முகத்தை பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தண்ணீர் மருத்துவம்

இளமையை தக்கவைப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்குண்டு. சருமத்தை மென்மையாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் தினம் 6 டம்ளர் தண்ணீர் பருகுவது அவசியம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
ஆன்டி ஆக்ஸிடென்ட் உணவுகள்

ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும். மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.

புகை, மது கூடாது

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் வயதான தோற்றம் எளிதில் வருகிறது.

ஆழ்ந்த உறக்கம்

சரியான உறக்கம் இல்லாமல் இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. அது சோர்வையும், இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

மகிழ்ச்சியே இளமைக்கு வழி

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், தாம்பத்ய உறவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆரோக்கியமான உறவு இளமையை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்திற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடும். அப்புறம் பாருங்கள் நீங்களும் ஆணழகன் தான்.

தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.
source:oneindia

Saturday, January 21, 2012

பொய் வசூல் காட்டும் நண்பன்


நண்பன் படம் எந்திரன் வசூலை மிஞ்சிவிட்டதாக இணயதளங்களில் வெளியீடு கொண்டு இருக்கிறார்கள் அது தவறு என்று box office உண்மையான கணக்கை வெளியிட்டது
எந்திரன் oneweek collection=69 கோடி
நண்பன்  Oneweek collection=20 கோடி

இ‌ப்படியு‌ம் ஒரு ‌நீ‌திப‌தி!

கொ‌ள்ளைய‌ர்களை த‌ண்டி‌க்க வே‌ண்டிய‌ ‌நீ‌தி‌ப‌தியே, கொ‌ள்ளைய‌ர்களை ‌ஜா‌மீ‌ன் எடு‌த்த கேவலமான ‌நிக‌ழ்வு த‌மிழக‌த்‌தி‌ல் அர‌ங்க‌ே‌‌றியு‌ள்ளது.

அ‌ண்மை காலமாக ‌சிவக‌ங்கை மாவ‌ட்ட‌ம், காளையாரகோவிலிலகொள்ளைசசம்பவங்களஅதிகரித்து வ‌ந்து‌ள்ளது. எ‌ப்போது ‌சி‌க்‌குவா‌ன் கொ‌ள்ளைய‌ன் எ‌ன்று பொ‌றிவை‌‌த்து கா‌த்‌திரு‌ந்த பொதும‌க்களு‌க்கு நே‌ற்று தே‌சியமயமா‌க்க‌ப்ப‌ட்ட வ‌ங்‌கி ஒ‌ன்‌றி‌ல் கொ‌ள்ளையடி‌க்க முய‌ன்ற இர‌ண்டு கொ‌‌ள்ளைய‌ர்களை ‌பிடி‌த்தன‌ர். அவ‌ர்களை நைய புடை‌த்த பொதும‌க்க‌ள் ‌பி‌ன்ன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் ஒ‌ப்ப‌டை‌த்து‌ள்ளன‌ர்.

கொ‌ள்ளைய‌ர்க‌ள் காவ‌ல்துறை‌யி‌ல் இரு‌ப்பதை தெ‌ரி‌ந்து கொ‌ண்ட தேவகோ‌ட்டையை சே‌ர்‌ந்த ‌நீ‌திப‌தி சரவணகுமா‌ர் எ‌ன்பவ‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து 2 கொ‌ள்ளைய‌ர்களையு‌ம் தனது சொ‌ந்த ஜா‌மீ‌னி‌‌ல் ‌விடு‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நீ‌திப‌தி‌யி‌ன் இ‌ந்த செயலை க‌ண்டு பொறு‌த்து‌க் கொ‌ள்ள முடியாத காளையா‌ர்கோ‌வி‌‌ல் ம‌க்க‌ள் அவரது எ‌திராக போரா‌ட்ட‌த்தை தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

நீ‌திப‌தி‌க்கு எ‌திரான இ‌ந்த போர‌ா‌ட்ட‌த்‌தி‌ல் வ‌ணிக‌ர்களு‌ம் த‌ங்க‌ள் கடைகளை அடை‌த்து‌க் கொ‌ண்டு பொதும‌க்களுட‌ன் கைகோ‌ர்‌த்து‌ள்ளன‌ர்.

நீ‌தி‌க்கு தலைவண‌ங்கு‌ம் ம‌‌க்க‌ள் நமது நா‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம்போது ‌நீ‌திப‌தி ஒருவ‌ரி‌ன் செய‌ல் ‌நீ‌தியை தலைகு‌னிய வை‌த்து‌ள்ளது. இ‌ப்ப‌டி‌ப்ப‌ட்ட ‌நீ‌திப‌தியா‌ல் பொதும‌க்களு‌க்கு ‌நீ‌தி ‌கிடை‌க்காது எ‌‌ன்பது உ‌ண்மையா‌கி ‌வி‌ட்டது. இதனா‌ல் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைமை ‌நீ‌திப‌தி இ‌க்பா‌ல் இ‌தி‌ல் நே‌ரிடையாகவே தலை‌யி‌ட்டு அ‌ந்த கறைபடி‌ந்த ‌நீ‌திப‌தியை தூ‌க்‌கி எ‌றியவே‌ண்டு‌ம்.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌தி‌ப‌தி ‌‌மீது உடனடி நடவடி‌க்கை எடு‌‌க்க‌ப்படா‌வி‌ட்டா‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் ‌மீது‌ம், ‌நீ‌திப‌திக‌ள் ‌மீது‌ம் ‌ம‌க்களு‌க்கு ந‌ம்‌பி‌க்கை‌யி‌ல்லாம‌ல் போ‌‌ய்‌விடு‌ம். இதனா‌‌ல் பல ‌விளைவுக‌ள் ஏ‌ற்படு‌ம் எ‌ன்பது உ‌ண்மை.

கொ‌ள்ளைய‌ர்களுட‌ன் கூ‌ட்டு வை‌த்‌திரு‌க்கு‌ம் ‌இ‌ந்த நீ‌தி‌ப‌தி‌யி‌ன் ‌தீ‌ர்‌ப்பு எ‌ப்படி இரு‌ந்‌திரு‌க்கு‌ம் எ‌ன்பது ‌த‌ற்போது தெ‌ள்ள‌த்தெ‌‌ளிவாக தெ‌ரி‌கிறது. கொ‌ள்ளைய‌ர்களுட‌ன் காவ‌ல்துறை‌யின‌ர் தா‌ன் கூ‌ட்டு வை‌த்து‌ள்ள ‌நிக‌ழ்வுதா‌ன் அர‌ங்கே‌றி வரு‌கிறது. த‌ற்போது ‌நீ‌திப‌தியு‌ம் கூ‌ட்டு சே‌‌ர்‌ந்து‌ள்ளதுதா‌ன் வேடி‌க்கையு‌ம், வேதனையுமாக இரு‌க்‌கிறது.
source:webdunia

அரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்?

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: அரவாணிகளிடம் ஆசி பெறுவதை நல்லதாகச் சிலர் கருதுகிறாரகள். இது சரியா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பழைய நூலான சகாதேவ மாலை என்று ஒரு நூல் இருக்கிறது. அது தற்போது எங்குமே கிடைப்பதில்லை. என்னுடைய தாத்தா வைத்திருந்தார். அதில், அரவாணிகள் புதனுடைய அம்சம் என்று சொல்லப்படுகிறது. ஈறு நிலை எனப்படும் அர்த்தணாரீஸ்வரர் நிலை என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் பார்த்தால், அரவாணிகளை பலி கொடுத்து கிருஷ்ணர் சிலவற்றை செய்ததாக இருக்கிறது. சிலரையெல்லாம் அழிப்பதற்கு அரவாணிகளால் முடியும். சில அரக்கர்கள் ஆணாலும், பெண்ணாலும் அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்குவார்கள். அதுபோன்றவர்களை அரவாணிகளை வைத்துதான் செய்ய முடியும். யாராலும் செய்ய முடியாத சில விஷயங்களை அரவாணிகளால் செய்ய முடியும்.

சில கடைகளில் காசு வாங்கிக் கொண்டு திருஷ்டி சுற்றி, கையை கீழே குத்தி மளமளவென்று திருஷ்டி முறித்து ஆசிர்வாதம் செய்வார்கள். இதுபோன்று செய்வதால் கண் திருஷ்டி, ஓம்பல் விலகுவதாக கருதுகிறார்கள். 
source:webdunia 

Friday, January 20, 2012

விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல்

ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் பிரதிபா பாட்டீல். விடைபெறும் படலம் இப்போதே துவங்கிவிட்டது. ஓய்வு பெறும் முன், அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்யப் போகிறார். அது முடிந்த கையோடு... அரசின் சீனியர் அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ தளபதிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளார். ஜூலை மாதம் பதவி ஓய்வு பெறும் பாட்டீல், மத்திய அமைச்சர்களுக்கு விருந்து அளித்து, புனேயில் செட்டில் ஆகிறார்.
source:dinamalar

நண்பன் வெற்றியை ஈடுகட்டுமா பில்லா 2:

தொடர்ந்து 6 தோல்வி படங்களை தந்த விஜய்க்கு காவலன்,வேலாயுதம் மற்றும் நண்பன் ஆகிய மூன்று படங்கள் தொடர் வெற்றியை பெற்று தந்தது .இனி வரவிருக்கும் படங்களான துப்பாக்கி ,யோகன் ஆகியவை வெற்றி பெரும் ஏன அதை இயக்கும் இயக்குனரை வைத்து
இப்பவே கணிக்க முடிகிறது ....
விஜய்க்கு நிகரான ரசிகர் வட்டாரத்தை கொண்டு இருப்பவர் “தள”அஜீத் ஒரு வெற்றி இரு  தோல்வி என்ற கணக்கில் அவரது படங்கள் வந்துகொண்டு இருக்கின்றன இருந்தாலும்
சமீபத்தில் வந்த மங்காத்தா தலைக்கு வசூல் ரீதியாக நல்ல வெற்றியை தேடி தந்தது .
2012இல் மிகுந்த எதிர்பார்புக்குரிய படங்களான நண்பன் மற்றும் பில்லா 2 .இதில் நண்பன் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி உள்ளது இனி வர இருப்பது தலயின் பில்லா 2.
பில்லா 2 ஏற்கனவே வெளிநாடு உரிமையை நல்ல  வீலைக்கு விற்று உள்ளது .பில்லா 2 கண்டிப்பாக வெற்றி பெரும் என தல ரசிகர்கள் நம்பிக்கை உடன் உள்ளனர்  .....வைட் அண்ட் சி

Thursday, January 19, 2012

சினிமா வாய்ப்பு :

நடந்து கொண்டு இருக்கும் திரைப்படதிற்கு நடிக்க புதுமுக நடிகர் ,நடிகைகள் தேவை .
தொடர்புக்கு :99941-73596

மீனாட்சி அம்மனுக்கு வைரகிரீடம்:

மதுரை மீனாட்சி அம்மனுக்கு நேற்று மதுரையை சேர்ந்த சுப்பையா செட்டியார் சரோஜா ஆச்சி தம்பதியினர் ரூ 1.5 கோடி மதிப்புஉடய வைரகிரீடதை உபயமாக வளக்கினார் .இக்கிரீடம் சுமார் 1.5 கிலோ தங்கத்தில் செய்யபட்டுலது .இதில் 300 கேரட்   வெள்ளை வைரக்கர்களும் ,154 கேரட் சிவப்பு ,பச்சைவைரக்கர்களும் பதிகபட்டுலது .இக்கிரீடம் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யபட்ட பின்னர் இத் தம்பதியினர் கோவில் இணை ஆணையர் ஜெயரமானிடம் வளக்கினார.

பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு விலைபோனது!!

அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பில்லா 2-ன் வெளிநாட்டு உரிமையை ஜிகே மீடியா என்ற நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 1 மில்லியன் டாலர்.

இதுவரை அஜீத் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா படம்
ரூ.3 கோடியே 7 லட்சத்துக்குதான் விலை போனது. ரஜினி படம்தான் அதிகபட்சமாக ரூ 15 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்து கமல், விஜய், சூர்யா படங்கள் ஏற்கனவே ரூ.5 கோடிக்கு விற்கப்பட்டன. இந்த ரூ 5 கோடி லிஸ்டில் இப்போது அஜீத் படமும் சேர்ந்துவிட்டது!
source:oneindia

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - நண்பன் முதலிடம்

4. மௌனகுரு
சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 5.75 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 1.32 கோடிகள்.

3. கொள்ளைக்காரன்
விதார்த் நடித்திருக்கும் இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 9.4 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2. வேட்டை
லிங்குசாமியின் இந்த மசாலா வெளியான முதல் இரு தினங்களில் 63.2 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

1. நண்பன்
நண்பன் முதல் நான்கு தினங்களில் 1.37 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. படம் நன்றாக இருப்பதால் வசூல் மேலும் அதிக‌ரிக்கும் 
source:webdunia

Wednesday, January 18, 2012

வேட்டை - திரைப்பட விமர்சனம்

பொங்கல் பண்டிகையின் குதூகல மூடுக்கேற்ப வந்துள்ள படம் என்றால் லிங்குசாமியின் வேட்டைதான். இத்தனைக்கும் படத்தின் கதை ஒன்றும் புதிதில்லை. எம்ஜிஆர் கால பார்முலாதான். ஆனால் அதை காட்சிப்படுத்திய விதமும், யுவன் சங்கர் ராஜாவின் துள்ளல் இசையும் படத்தை உற்சாகமாக ரசிக்க வைக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் பாக்யராஜ் இயக்கம் நடிப்பில் 'அவசர போலீஸ் 100' என்று ஒரு படம் வந்தது (அமரர் எம்ஜிஆர் நடித்த காட்சிகளை சேர்த்து). கிட்டத்தட்ட அதே கதையை கொஞ்சம் ரிப்பேர் பண்ணி வேட்டையாக்கியிருக்கிறார் லிங்குசாமி.

மாதவனும் ஆர்யாவும் பாசமிக்க அண்ணன் தம்பிகள். இவர்களது அப்பா தூத்துக்குடியில் போலீஸ் அதிகாரி. மாதவன் இயல்பில் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால் ஆர்யாவோ அதிரடிப் பார்ட்டி. அண்ணனின் பயத்தைப் போக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார் ஆர்யா. அப்பா மறைவுக்குப் பிறகு அவரது காக்கி யூனிபார்மை அண்ணன் மாதவனுக்கு மாட்டிவிடுகிறார்!

வெறும் யூனிபார்ம்தான் மாதவனுக்கு... ஆனால் நிஜத்தில் அத்தனை சாகஸங்களையும் செய்பவர் ஆர்யா. வெளியில் தெரியாமல் நடக்கும் இந்த டூப்ளிகேட் சமாச்சாரம், மூன்று தூத்துக்குடி ரவுடிகளை களையெடுக்கும் முயற்சியில் அம்பலமாகிவிடுகிறது. மாதவனையும் ஆர்யாவையும் ஒழித்துக்கட்ட கைகோர்க்கிறார்கள் ரவுடிகள். இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் சகோதரர்கள் என்பது எளிதில் யூகிக்கக் கூடிய க்ளைமாக்ஸ்.

இடையில் பயந்தாங்கொள்ளி மாதவனுக்கு தடாலடி சமீராவை திருமணம் செய்து வைப்பதும், அப்படியே சமீராவின் அழகுத் தங்கை அமலாவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் பூப்பதும் செம ஜாலியாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஆர்யா அதிரடி பண்ணுகிறார். நடனம், சண்டை, காதல், நகைச்சுவை, அமெரிக்க மாப்பிள்ளையைக் கலாய்ப்பது என அத்தனை காட்சிகளிலும் வெளுத்துக் கட்டியுள்ளார். படத்துக்கே தனி வண்ணத்தை தருகிறது ஆர்யாவின் துடிப்பான நடிப்பு.

அண்ணனாக வரும் மாதவன் அடக்கி வாசித்து, மனதைக் கொள்ளையடிக்கிறார். அதிரடியாக அதகளம் பண்ணுவதை விட, ஒரு கோழையாக நடிப்பதில்தான் சவால் அதிகம். மாதவன் அந்த சவாலில் ஜெயித்திருக்கிறார். ரவுடிகளிடம் அடிபட்ட பிறகு, 'போதுண்டா... எவ்வளவு நாளைக்குதான் நீ வந்து காப்பாத்துவேன்னு காத்திட்டிருக்கிறது' என்று அவர் பேசும் காட்சியும், தம்பியை அடிப்பது பொறுக்காமல், தன்னையறியாமல் வீல்சேரிலிருந்து எழுந்து இரும்புக் கம்பி வலையை ஏறிக் குதிப்பது போன்ற காட்சிகளில் மாதவன் நடிப்பு 'க்ளாஸ்'!

கதைக்களம் தூத்துக்குடி என்பதற்காக அனாவசியமாக ஏலே வாலே போலே என்று பாத்திரங்களை செயற்கையாக பேசவிடாததற்காக இயக்குநருக்கு நன்றிகள் (நாசர் விலக்கு).

நாயகிகள் இருவருமே படத்துக்கு பெரும் பலம். சமீராவின் அதிரடியும் அமலா பாலின் கிறங்கடிக்கும் கவர்ச்சியும் ரசிகர்களுக்கு விருந்துதான். போலீஸ் கணவனைத் தேடி வீட்டுக்கு வரும் ரவுடியை வீராவேசமாக எதிர்க்கும் காட்சியில் சமீராவும், அமெரிக்க மாப்பிள்ளையை வெறுப்பேற்ற ஆர்யாவுக்கு லிப் டு லிப் அடிக்கும் காட்சியில் அமலாவும் அட்டகாசம்!

க்ளைமாக்ஸில் எந்த புதுமையும் இல்லாதது ஒரு குறை. ரவுடிகள் மாதவன் வீட்டை முற்றுகையிடும்போதே, முடிவு தெரிந்துவிடுகிறது. ஆர்யா அடுத்து என்ன ஆவார் என்று கூட பக்கத்து சீட்காரர் கணித்துச் சொன்னது, தமிழ் சினிமா இயக்குநர்களை மக்கள் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சான்று!

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பண்டிகைக்கால உற்சாகத்தைத் தருகிறது. தூத்துக்குடி பக்கத்தில் இப்படியெல்லாம் லொகேஷன்கள் இருக்கிறதா...!

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இன்னொரு ப்ளஸ். அந்த பப்பரப்பா பாட்டுக்கு தியேட்டரே ஆடுகிறது. பழைய கதையை பரபரப்பாக நகர்த்திச் செல்வதில் எடிட்டர் ஆண்டனியின் பங்கு பெரியது!

ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. அது, படம் பார்ப்பவர்களை ஒரு கணம் கூட யோசிக்கவே விடக்கூடாது. ஜாலியாக பார்க்க வேண்டும் என்பதுதான். லாஜிக், எதார்த்தம் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பார்த்தால் இந்தப் படத்தை ரசிக்க முடியும்!

வேட்டை ... வசூல் வேட்டை!

விக்ரம் ஜோடி இஷா ஷர்வானி

தாண்டவம் படத்துக்குப் பிறகு விக்ரம் இந்திப் படத்தில் நடிக்கிறார். சைத்தான் படத்தை இயக்கியவர்தான் இந்த டேவிட்டையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக எப்பவோ ஃபீல்ட் அவுட்டான தபு நடிப்பதாக ஒரு செய்தி. விக்ரம் தரப்பு மட்டுமல்ல பாலிவுட்டே இந்த காம்பினேஷனை கற்பனை செய்து கண்ணீர்விட்டது. நல்லவேளையாக இந்த கொடுந்துயரம் டைரக்கடருக்கும் தெ‌ரிந்துவிட, தபுவுக்குப் பதில் இஷஷர்வானியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

தப்பித்தார் சீயான்.

Monday, January 16, 2012

ரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!

ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத்.

இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார் (இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்!)

அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன!

சூப்பர் ஹிட்டான விஜய்யின் நண்பன்!

அதிரடி ஆக்ஷன் இல்லாமல், டாடா சுமோக்கள் பறக்காமல், பிரமாண்ட கிராபிக்ஸ்கள் இல்லாமல் விஜய்-ஷங்கரின் கூட்டணியில் நல்ல கதையுடன் வந்திருக்கும் நண்பன், 2012ம் ஆண்டின் முதல் மெகா ஹிட் தமிழ்ப் படம் என்ற பெயரை வாங்கியுள்ளது.

வசூலில் அள்ளிக் குவித்து வரும் இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுந்துள்ளது.

3 இடியட்ஸ் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அப்படியே சீனுக்கு சீன் மாற்றாமல் எடுத்திருந்தாலும், ஷங்கர் தனது வேலையைக் காட்டி தமிழுக்கு ஏற்ற மாதிரி ட்யூன் செய்து அசத்தியிருக்கிறார்.

விஜய்க்கும் இது மிக மிக வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும். எதிரிகளை நோக்கி சுட்டு விரலை நீக்கி அடிக்குரலில் கத்தாமல், பார்வையாலேயே எதிரியை துளைக்காமல், மிக யதார்த்தமான பக்கத்து வீட்டு பையன் மாதிரியான ஒரு கேரக்டர்.

இளைய தளபதி என்ற பட்டத்தையெல்லாம் தூர ஒதுக்கி வைத்துவிட்டு, தனது கேரக்டரை மிக அழகாக உள்வாங்கி பின்னி எடுத்திருக்கிறார்.

ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் என அனைவருமே ஒரு டீமாக இறங்கி, அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்து காட்டியுள்ளனர். ஒரு ஸ்ட்ரெய்ட் என்டர்டெயின்மெண்ட் என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கொள்ளையடித்துள்ள இந்தப் படம், வசூலிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் படம் ரிலீசான இடமெல்லாம் சீட்கள் நிரம்பி வழிகிறதாம். இதனால் ரிலீசான 4 நாட்களிலேயே படத்தைத் தயாரித்த ஜெமின் சர்க்யூட் தயாரிப்பாளர்களுக்கு வசூல் மழை.

படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வெளியாகி வருவதால், ரிபீட் ஆடியன்ஸோடு, பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளது இந்தப் படம்.

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக்கு யாரா நம்பி வந்திகனு கேட்க உடனே அடுத காட்சியில் வருகிறது தள அஜீத்இன் மங்காதவின் introduction scene இது போதுமே அஜீத் ரசிகர்களுக்கு விசிலை  பறக்கவிட.....

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ளது திருமூர்த்தி அணை. வனங்களால் சூழப்பட்டு கண்ணுக்கு அழகாக காட்சி அளிக்கும் அணையில் ‘ஆபத்தும்’ இருப்பதாக சொல்லப்படுகிறது.  வனங்களுக்கு இடையே பஞ்ச லிங்க அருவி இருக்கிறது. இது ஓடையாக வழிந்தோடி அணையில் சங்கமிக்கிறது. பஞ்சலிங்க அருவியிலும், அணை கரையிலும் மக்கள் குளிப்பது வழக்கம். இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி சாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதற்கு நிராசையுடன் இறந்தவர்களின் ஆவிதான் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தோடு சொல்கிறார்கள்.
அணை கட்டி 53 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அருவியிலும், அணையிலும் மூழ்கி மூச்சு திணறி பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. ‘அணையில் உள்ள யானைகஜம், காளியம்மன்கோயில், பரையங்காடு பள்ளம் ஆகிய இடங்களில் குளிப்பவர்கள் அநியாயமாக பலியாகின்றனர். இங்கு நீச்சல் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள்கூட இறக்கின்றனர். இதற்கு கெட்ட ஆவிகளின் நடமாட்டம்தான் காரணம். இந்த ஆவிகள்தான் அணையில் குளிப்பவர்களின் உயிரை பலி வாங்குகின்றனÕ என்று திகிலுடன் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
அணை கட்டுவதற்கு முன்பு, மலையில் இருந்து ஓடி வரும் நீர், பாசனத்துக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்டதாகவும், பாலாற்றை தடுத்து அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உயிரை விட்டதாகவும், அவர்களின் ஆவிதான் நிராசையுடன் அணையை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் சிலரோ, ‘அணையில் மூழ்கி பலியாவோர் பெரும்பாலும் வெளியூர்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் தங்கள் பகுதியிலேயே திதி கொடுக்கின்றனர். இதனால் மனம் சாந்தி அடையாமல் ஆவிகள் அணையிலேயே திரிந்து  பலரை பலி வாங்குகின்றனÕ என்றும் கூறுகின்றனர். ‘குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தண்ணீருக்குள் யாரோ இழுத்தது போன்று மூழ்குகின்றனர். உயிருக்கு போராடுபவரை காப்பாற்ற செல்பவரும் பலியாகி விடுகிறார். சடலங்களையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதுÕ என்று சொல்லும் மக்களின் பேச்சில் பயத்துக்கு குறைவில்லை.
 அணையில் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் இதே ஆவி கதைகள் உலா வருகின்றன. இதற்கு காரணம் இங்கும் அடிக்கடி பலிகள் நேர்வதுதான். பரிகார பூஜைகள் செய்து ஆவிகளை சாந்தம் அடைய செய்தால் தான் இறப்புகளை தவிர்க்க முடியும் என்று சிலர் சொல்கின்றனர். அதே போல் பஞ்சலிங்க அருவியில் ஏற்படும் பலி சம்பவங்களுக்கு காரணம், அருவியில் திடீரென்று பெருக்கெடுக்கும் வெள்ளம். குளிக்கும்போது சாதாரணமாக கொட்டும் நீர், திடீரென்று பெருக்கெடுக்கும்போது அருவியில் குளிப்பவர்கள் தாங்க முடியாமல் தப்பி விடுகிறார்கள். அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கு குளிப்பவர்கள்தான் வெள்ளத்தில் தப்பிக்க வழியில்லாமல் அடித்துச்செல்லப்படுகின்றனர். அங்குள்ள ஒட்டப்பாறை, ஏழுமுக்கு, மாமரத்து கஜம் ஆகிய இடங்களில் உள்ள பொந்துகளில் சிக்கி உயிரை விடுகின்றனர்.
அணையில் குளிக்கவும், அருவிக்கு செல்லும் ஓடை வழித்தடங்களில் குளிப்பதையும் வனத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை கடுமையாக தடுத்து நிறுத்தினால் உயிர்ப்பலியாவது நிற்கும். அது வரை ஆவி, பலி வாங்கல் என்று கூறுவது மர்மமாக தான் இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். ‘பேயும் இல்லை. பிசாசும் இல்லை. அணையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் சிக்குபவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கிறார்கள்Õ என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இருப்பினும் ஆவி பயம் மக்களை விட்டு இன்னும் அகவில்லை.
-உடுமலை எஸ்.கண்ணன்

குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது கோட்டை கருப்பசாமி கோயில். இந்த கோயிலில் தரப்படும் பிரசாதம் திகைக்க வைக்கிறது. கிடாவின் கறிதான் ரத்தம் சொட்டச் சொட்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதோடு மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயிலுக்கு வந்தால், அவர்கள் கோர மரணத்தை சந்திப்பார்கள் என்பதும் அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கருப்பசாமி திருவிழாவின் போது நடுநிசியில் சாமி வேட்டைக்கு செல்வார். சாமி வேட்டை முடிந்து வந்ததும், வரிசையாக ஆயிரக்கணக்கில் ஆட்டு கிடாக்கள் வெட்டப்படுகின்றன. அப்போது ஆண்கள் மட்டுமே கோட்டை கருப்பு முன்பு இருக்க வேண்டும் என்பதை நியதியாக வைத்திருக்கிறார்கள் ஊர்மக்கள். எனவே இதில் பெண்கள் கலந்து கொள்வதில்லை. கோயில் எல்லைக்குள் நுழைவதும் இல்லை. மீறி வந்தால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயமாம்.
பெண்கள் மட்டும் கலந்துகொள்ளாதது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. பொதுவாக முன்னோர் வழிபாடு, ஆவி வழிபாடு போன்றவற்றில் பெண்கள் கலந்துகொள்வதில்லை. மதுரை பகுதியில் பாடையெழுப்புதல் என்ற சடங்கு சில இடங்களில் நடத்தப்படும். ஆவி இருப்பதாக நம்புபவர்கள் இந்த சடங்கு நடத்துகிறார்கள். அற்ப ஆயுசில் இறந்தவர்கள் ஆவியாக அலைவதாக கூறப்படுவது உண்டு. அது நல்லதல்ல என்ற நம்பிக்கையில் ஆவி ஓட்டும் சடங்கை செய்கின்றனர். இறந்தவரது ஆவியை எழுப்பி மரத்திலோ, புதிதாக நட்ட செடியிலோ குடியேற வைப்பார்கள். உடுக்கை அடித்து வாணவேடிக்கை முழக்கி சாமியாடி ஆடுவார். ஆவி ஓட்டும் சடங்கு துவங்கியதும், மண் கலயத்தில் தண்ணீர் ஊற்றப்படும். அருகில் விளக்கு ஒன்றை எரியவிடுவார்கள். இரவு முழுக்க அந்த விளக்கு எரியும். ஆவியாக அலைபவர் பூச்சி வடிவெடுத்து அதை நெருங்கி வருவார்களாம். விளக்கை நெருங்கி வரும் பூச்சி, தண்ணீர் கலயத்தில் விழும். விழுந்ததும் கலயத்தை மூடிவிடுவார்கள். பூச்சி வடிவில் உள்ளே விழுந்த ஆவிக்கு மாலை, மரியாதை செலுத்தி வழிபடுவார்கள். வழிபாடு முடிந்த பிறகு, கலய நீரை மரம் அல்லது செடியில் ஊற்றிவிடுவார்கள். அந்த ஆவியானது மரம் அல்லது செடியில் குடியேறிவிடும் என்பது நம்பிக்கை. ஆவி குடியேறிய மரத்தை தொடர்ந்து வழிபடுவார்கள். இதுபோன்ற வழிபாடுகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. அதுபோலவே, இங்கும் பெண் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஊர் பெரியவர்கள் சிலர்.
 கருப்பசாமி முன்பு ஆடுகளை அறுத்து முடித்தவுடன் கறித் துண்டுகள் வெட்டப்படுகிறது. ரத்தம் வழிய வழிய அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆட்டு இறைச்சியை போட்டி போட்டு வாங்கும் ஆண் பக்தர்கள் கோயிலிலேயே ஒன்றாக கறிக் குழம்பு சமைக்கிறார்கள். இந்த குழம்பையும் கோட்டை கருப்பசாமியின் பிரசாதமாக நினைத்து சாப்பிடுகிறார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கும் குழம்பை தொட்டு நாக்கில் தடவுகிறார்கள். இதன் மூலம் அவர்களை துஷ்ட சக்திகள் அண்டாது என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கறி மீதமாகி விட்டால் அதை வீட்டுக்கு எடுத்து செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். இந்த விழாவுக்காக தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கோயிலில் குவிகிறார்கள். மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயில் விழாவில் கலந்து கொண்டால், அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று கூறப்படுவது திகிலூட்டும் மற்றொரு விஷயம். இந்த சம்பிரதாயத்தை மறந்தோ, அலட்சியப்படுத்தியோ மது குடித்துவிட்டு வந்தவர்கள் கோரமாக பலியாகி இருப்பதாக ஊர்வாசிகள் பட்டியலிட்டு சொல்கிறார்கள். இதனால் கோயில் விழாவுக்கு வரும் பக்தர்கள் மதுவை மனதால்கூட நினைப்பது கிடையாதாம்.
- நாச்சிபாளையம் கே.பூபதி

சீதனம் கேட்டு மனைவியை நண்பனுடன் படுக்க வைத்த கணவன்.!!

மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து மயங்கிய நிலையில், நண்பருடன் சேர்த்து ஆபாச படமெடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டிய கணவன் மீது கோவை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த பிக்கட்டியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், உடலில் காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்:
எனக்கும், பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த முகமது பயாஸ்(25) என்பவருக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் பெங்களூரில் தனிகுடித்தனம் நடத்தினோம். சில மாதங்களிலேயே கணவர் மேலும் நகை, பணம் கேட்டு டார்ச்சர் செய்ய துவங்கினார். சமீபத்தில் தலைவலிக்கு மாத்திரை கேட்டேன். கணவன் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதும் மயங்கி விட்டேன்.
பின்னர் அவரது நண்பரை என்னோடு சேர்த்து ஆபாச வீடியோ எடுத்துள்ளார். அதை என்னிடம் காட்டி, எனது பெற்றோரிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் வாங்கி வராவிட்டால், இந்த ஆபாசபடத்தை இன்டர் நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்.

 நான் கோவையில் உள்ள எனது அண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டேன். இங்கு வந்தும் என்னை தாக்கினார். எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து முகமது பயாஸ் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பயாசை தேடி பெங்களூருக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

ஜீவா கடவுட்டை ஓரம் கட்டிய விஜய் ரசிகர்கள்:

நான் நண்பன் திரைப்படம் பாக்க அருகில் உள்ள  தியேட்டர் சென்றேன் அங்கு விஜய் ரசிகர்கள் அதிக அளவில்  கடவுட்  வைதிருந்தனர்   அப்பொளுது  தியேட்டர் ஒதுக்கு புறமாக ஒரு கடவுட் கிலிந்தநிலயில் கிடந்தது போயி பார்த்தால் அது ஜீவா ரசிகர்கள் வைத்த கடவுட் விஜய் ரசிகர்களால் ஒதுக்கபட்டு ரெம்ப மோசமா கிடந்தது.....  விஜய் மற்றும் ஜீவா தான் நண்பர்கள்  ரசிகர்கள் கிடயாதே..

இந்த அணியால் அயல்நாடுகளில் வெல்ல முடியாது-கங்கூலி

இப்போதுள்ள இந்திய அணியால் அயல்நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கூலி தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் எந்த ஒரு அணியும் இவ்வளவு நீண்ட காலம் அயல்நாடுகளில் இவ்வளவு மோசமாக விளையாடியதில்லை. இரண்டாவது இன்னிங்சில் சரணாகதியடைந்ததை பார்க்க வேதனையாக இருந்தது. இது எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும் இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது இந்த அணி அயல்நாடுகளில் வெல்ல முடியாது.

இப்போதுள்ள வீரர்களுடன் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால் இப்போதைய இவர்களது துரதிர்ஷ்டமான ஆட்டம் வேதனையளிக்கிறது. ஆனால் இதுதான் எதார்த்தம், இந்த இடத்தில்தான் இந்திய கிரிக்கெட் இப்போது உள்ளது.

இந்த அணி அனைத்து விமர்சனங்களுக்கும் தகுதி உடைய அணியே.

மூத்த வீரர்கள் சரியான நேரத்தில் அவர்களாகவே ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கூறி வருகிறேன்.

வெளிநாட்டில் நடைபெறவுள்ள அடுத்த டெஸ்ட் தொடரில் அவர்களுக்குப் பதிலாக மாற்றுவீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். திராவிட், லட்சுமண் இருவரும் இந்திய ஆடுகளங்களில் தொடர்ந்து ரன் குவிப்பார்கள். அடுத்த டெஸ்ட் தொடர் 2013-ல் தான் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு திராவிட், லட்சுமண் இருவரும் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும்.

பெர்த் டெஸ்டில் இந்தியாவின் தோல்வியைத் தவிர்க்க முடியாது. அடிலெய்டில் நடைபெறவுள்ள 4-வது டெஸ்டிலும் இந்தியா தோல்வியடையலாம். இந்த டெஸ்ட் தொடருக்குப் பின் இந்திய அணியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். அவ்வாறு செய்தால்தான் இந்திய கிரிக்கெட் நன்றாக இருக்கும்.

அடுத்த 3 இன்னிங்ஸ்களில் தோனி சிறப்பாக ஆடி தன்னை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் ஆடும் லெவனில் அவர் விளையாடுவது சந்தேகமாகிவிடும் என்றார்.

Sunday, January 15, 2012

ஹன்சிகா - அடுத்த கடவுள்?

நடிகைகளுக்கு கோவில் கட்டுவதில் தமிழனை அடிச்சுக்க முடியாது. குஷ்புக்கு கோவில் கட்டியவன் அடுத்து யார் வாகாக மாட்டப் போவது என்று பல காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இந்த நேரத்தில்தான் அவன் கண்ணில் பட்டிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போலவே தளதள அழகு. குஷ்புவே, ஹன்சிகா என்னைவிட அழகு என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார். இது போதாதா?

ரசிகர் மன்றம் அமைக்கப் போறோம், உடனே அனுமதி கொடுங்க என்று ஹன்சிகாவை நச்ச‌ரிக்கிறார்களாம். அவரும் ஏதோ அரசியல் கட்சி தொடங்கப் போவது போல் சுற்றமும் நட்பும் சூழ ஆலோசனை நடத்தி வருகிறார்.

ம்.. நல்லா விளங்கிரும்.

Saturday, January 14, 2012

2 புதிய வண்ணங்களில் ஷைன்: ஹோண்டா அறிமுகம்

சந்தை போட்டியை சமாளிக்கும் விதமாக 2 புதிய வண்ணங்களில் ஷைனை பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா. இந்த புதிய ஷைன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஷைன் 125 சிசி மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், சந்தை போட்டியை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஷைன் இருக்கிறது.

இதை மனதில் கொண்டு கூடுதலாக 2 புதிய வண்ணங்களில் ஷைன் பைக்கை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். தற்போது கருப்பு, கெனி கிரே மெட்டாலிக், ரிபெல் ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் ஷைன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஃபோர்ஸ் சில்வர் மெட்டாலிக் மற்றும் மான்சூன் கிரே மெட்டாலிக் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் ஷைன் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், புதிய கிராபிக்ஸ் ஸ்டிக்கர்களும் ஷைனுக்கு புதுப்பொலிவை கூட்டுவதாக இருக்கிறது.

எடையை குறைக்க எட்டே வழிகள்!

காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.

நம் அன்றாட வேலைகளை செய்யவும், உடல் உறுப்புகள் இயங்கவும், நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது. இவ்வாறு, இந்த சேமிப்பு, ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும் போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம். மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் திகரிக்கின்றன.

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.

1.தினசரி காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.
3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.
4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.
5. காலை சிற்றுண்டி (8.00 - 9.00 மணிக்குள்): வெண்ணெய் எடுத்த மோர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.
6. மதிய உணவு (12.00 - 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.
7. இரவு உணவு (7.00 - 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.
8. பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க ல்லவும். "இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.

ஸ்டேட் பாங்கில் 2500 பணி வாய்ப்பு

ஸ்டேட் பாங்கில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான 2500 கிளரிகல் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்க முடியாது. மாநில வாரியாக இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒருவர் ஒரு மாநில காலியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
காலியிட விபரம்:
எஸ்.சி., பிரிவினருக்கான காலியிடங்கள் 1150
எஸ்.டி., பிரிவினருக்கு 750
ஓ.பி.சி., பிரிவினருக்கு 600
இது தவிர வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஸ்டேட் பாங்கின் காலியிடங்கள் கூடுதலாக 600 அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதிகள்:
பட்டப்படிப்பு அல்லது பிளஸ்2 தகுதி பெற்றிருக்க வேண்டும். பிளஸ்2 முடித்திருப்பவர் குறைந்தது 60 சதவீதத்துடன் அதில் தகுதி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 55 சதவீதம் பெற்றிருந்தால் போதும். 10ம் வகுப்பிற்குப் பின் டிப்ளமோ தகுதி பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம். எந்த மாநில காலியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநில மொழியில் பேச எழுத தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
வயது தகுதி:
1.12.2011 அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 33 வயது வரை இருக்கலாம். ஓ.பி.சி., பிரிவினர் 31 வயது வரை இருக்கலாம்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவீர்கள். பொது அறிவு, பொது ஆங்கிலம், கணிதம், ரீசனிங் மற்றும் மார்க்கெட்டிங்/கம்ப்யூட்டர் ஆப்டிடியூட் ஆகிய பகுதிகளில் அப்ஜக்டிவ் தேர்வு நடத்தப்படும். தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண் முறையில் மதிப்பெண் கழிக்கப்படும். எழுத்துத் தேர்வானது 18.3.2012 அன்று நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் முகவரியை பெற்றிருப்பது அவசியம். போட்டோ மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து தயாராக வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த முழு விபரங்களையும் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 20, 2012.
விபரங்களறிய உதவும்:
இணைய தள தொடர்பு முகவரி:
www.sbi.co.in/webfiles/uploads/files/1324991067870_SBI_CLERK_RECRUITMENT_DETAILED_ADVT.pdf
இணைய தள முகவரி:
www.statebankofindia.com
www.sbi.co.in

இனிய பொங்கல் நல்வாள்தூக்கள்

வலை பகிர்வாளர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாள்தூக்கள்

புயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அறிவிப்பு

புதுவை: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவிகள் செய்யப் போவதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுவை மக்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. புதுவை சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் பகல் 11.45 மணியளவில் புதுவைக்கு வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விஜய்யை பார்த்ததும் அவர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர். அவர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்த விஜய் விழா மேடைக்கு வந்தார்.

பின்னர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவரும், புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்சிஆனந்த் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அரிசி, ஆடைகள், போர்வை, பாய், பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய். அப்போது அவர் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியை முன்கூட்டியே நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக இருந்தது. ஆனால் சூட்டிங் காரணமாக என்னால் முன்கூட்டி வரமுடியவில்லை.

நாங்கள் இப்போது அளித்துள்ள உதவி சிறிய அளவிலானது தான். இன்னும் இதுபோன்ற உதவிகளை செய்வோம். அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

முன்னதாக விஜய் புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப்பார்த்து அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

விரைவில் கடலூர் மக்களையும் சந்தித்து உதவி வழங்குவதாக அவர் தெரிவி்த்தார்.

பிணவறையில் பெண்ணில் உடலை ருசிபார்த்த எலிகள்: ராஜஸ்தானில் நடந்த அவலம்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தின் பீவார் நகரில் உள்ளது அம்ரித் கௌர் அரசு மருத்துவமனை. அங்கு பிரேத பரிசோதனைக்காக ஜானகி தேவி(24) என்ற பெண்ணின் உடல் கொண்டு வரப்பட்டது. பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் உடலை கடந்த 12ம் தேதி இரவு எலிகள் கடித்து குதறியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தார் ஆத்திரமடைந்தனர். மருத்துவமனையின் கவனக்குறைவால் தான் இவ்வாறு நடந்துள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் இது போன்ற சம்பவம் கடந்த 3 நாட்களுக்கு முன்பும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோத்பூரில் உள்ள மதுரா தாஸ் மாதுர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது வாதமடித்த முதியவரின் காதுகள், மூக்கு, உதடுகள் மற்றும் கன்னங்களை எலிகள் கடித்தன. இதனால் அவர் காயம் அடைந்தார். இதையடு்தது பணி நேரத்தில் தூங்கிய மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

சூர்யாவின் சூப்பர் கேரக்டர்

வித்தியாசமான கேரக்டர்களை விரும்பி ஏற்பதில் கமலையும் பின்னுக்கு‌த் தள்ளவிடுவார் சூர்யா. இவர் நடிக்கும் மாற்றான் படத்தில் இவரது கேரக்டர்தான் இப்படி சொல்ல வைத்திருக்கிறது.
WD

கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடிக்கிறார். இப்படி ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகி‌ச்சை மூலம் பி‌ரித்தால் இரு குழந்தைகளுமே மரணமடைய நேரும். அதனால் அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் ஒட்டியே இருப்பார்கள். நடப்பது முதல் படுப்பதுவரை அனைத்துமே சிரமம்.

இதனை மையமாக வைத்து மலையாளத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. அதில் ஒட்டிப் பிறந்தவர்களாக இரு வேறு நடிகர்கள் நடித்தனர். மாற்றானில் இந்த இரு வேடத்திலும் சூர்யாவே நடிக்கிறாராம். டபுள் ஆ‌க்சன்.

ஐந்து வேடங்களில் சூர்யா

தமிழ் சினிமாவின் இப்போதைய பாக்ஸ் ஆஃபிஸ் இயக்குனர் கே.வி.ஆனந்த். அயன் என்ற ஒரே படத்தில் இதனை சாதித்துள்ளார்.

கோ படத்தை ‌ரிலீஸ் செய்த கையோடு சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை இயக்குகிறார். வழக்கம் போல இரட்டை எழுத்தாளர்கள்தான் கதை.

இந்தப் படத்தில் சூர்யா வித்தியாசமான ஐந்து வேடங்களில் நடிக்கிறார். இதனை‌த் தெ‌ரிவித்த கே.வி.ஆனந்த் ஐந்தில் ஒன்று ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தை கதாபாத்திரமா என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார்.

படப்பிடிப்புக்கு முன்பே கேரக்டர் பற்றி செய்தி கசிந்ததால் பெரும்பாலும் அந்த கேரக்டர் படத்தில் இடம் பெறாது என்கிறார் ஆனந்தை அறிந்தவர்கள்

அனுஷ்காவின் டெடிகேஷன்

அனுஷ்காவுடன் பணிபு‌ரிய நடிகர்கள் மட்டுமல்ல, இயக்குனர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். தயா‌ரிப்பாளர்களுக்கும் அனுஷ்கா என்றால் ஆனந்தம்.

அனுஷ்காவின் அதிகபடியான அழகு மட்டும் இதற்கு காரணம் இல்லை. முக்கியமான விஷயம் அவரது டெடிகேஷன். பெ‌ரிய ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல் ஷுட்டிங் தொடங்கும் முன்பே மேக்கப்புடன் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். அதுவும் சுரா‌ஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலும் முதலில் மேக்கப்புடன் தயாராவது அனுஷ்காதான்.

படப்பிடிப்புக்கு இவ்வளவு டெடிகேட்டாக எந்த நடிகையும் வருவதில்லை என்று சுரா‌ஜ் அனுஷ்காவை புகழ்கிறார். நெ.1 கனவில் இருப்பவர்கள் அனுஷ்காவை பின்பற்றுவது நலம்.

எடை குறையும் பிரசாந்த்

மம்பட்டியான் படத்துக்காக உடல் எடையை கூட்டிய பிரசாந்த் அதனை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார்.

மம்பட்டியான் படத்துக்குப் பிறகு மூன்றுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதில் முதல் படம் நடனத்தை மையமாகக் கொண்டது என தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். அவரது டார்கெட் பதினோரு கிலோ என்கிறார்கள்.

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப் படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது... அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.

வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு பார்த்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும். வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன் படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா பதவிக்கு வந்த இந்த 7 மாதங்களில் வரி விலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 12, 2012

முகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்

மனித உடலில் முக்கிய பகுதியாக கருதப்படுவது முகம். முகத்திற்கு அழகூட்டுவதற்கு எண்ணற்ற கிரீம்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகு நிலையங்கள் பலவும் முகத்திற்கு பொலிவூட்ட பல வித உபயங்களை கையாளுகின்றன. அதில் முக்கியமானது முக மசாஜ். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவை கூட்டுகிறது.

மசாஜ் செய்ய அழகு நிலையங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்பதில்லை. நாமே நமது முகத்தை வீட்டிலேயே மசாஜ் செய்து கொள்ளலாம். முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்தால் முகத்தின் அழகு அதிகரிக்கும்.

கவனம் அவசியம்

முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்திற்கு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஊட்டம் தரும் தயிர்

பஞ்சில் கிலென்சிங் மில்க் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள். பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. அவரவர் முகத்திற்கு பொருத்தமான க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக் கொள்ளுங்கள்.

கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுகி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.

வெது வெதுப்பான நீர்

மசாஜ் செய்து முடித்ததும் இரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். பிறகு சிறுது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு நொறுநொறுப்பான பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை கரகரப்பாக தேய்க்க வேண்டும்.

கரும்புள்ளிகளை நீக்கவேண்டும்
பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும்.

யார் செய்யலாம்

மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது.எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். அப்புறம் பாருங்கள் உங்கள் முகம் பள பளப்பாய் ஜொலிக்கும்.

ஆண்களுக்கான இளமை ரகசியம்!

ஆண்களிலசிலரபார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றுமமார்க்கண்டேயனாகவதோற்றமளிப்பர். . இந்மார்க்கண்டேதோற்றத்ததக்கவைத்துக்கொள்வதஒன்றுமபெரிகம்சூத்திரமஅல்லதபிரம்வித்தையஅல்ல. . . ! மாறாகொஞ்சமமெனக்கிட்டாலவயதஏறிகொண்டபோனாலும், குறைந்வயததோற்றத்துடனநீண்காலமஇருக்முடியும்.

நமதவயதமுதலிலவெளிப்படுத்துவதசருமமதான், அதனஒழுங்காக, சீராபராமரித்தாலநமதஆயுடகாலமுமநீடித்தஇருக்கும். அப்படி என்றுமஇளமையுடனஇருக்இதசிடிப்ஸ். . . ! .

நாமஅதிகமாசூரிவெளிச்சத்திலபயணிப்பதாலும், எண்ணெயஅதிகமுள்உணவுகளஉட்கொள்வதாலும், மாசுள்காற்றசுவாசிப்பதாலுமநமதசருமத்திலமுதுமதோற்றமதெரிகிறது. இதனதடுக்க, சிறந்முதுமதடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளபயன்படுத்தவதநல்லது. மேலுமஅதிகமாதண்ணீரபருகுதலசருமத்தபாதுகாக்கும்.

பெண்களினசருமத்தகாட்டிலுமஆண்களினசருமம் 20 விழுக்காடகூடுதலகடினத்தன்மையுடனஇருக்கும். ஆயினுமவயதகூடும்போதகொல்லாஜனஎனுமபுரதமகுறைவதாலசருமத்திலசுருக்கமஏற்படுகிறது. உடலகூறுவியலின்படி பெண்களகாட்டிலுமஆண்களினமுதிர்ச்சி சிகாலத்திற்கபிறகதானதோன்றும், ஆனாலஒரசிபழக்கவழக்கங்களினாலஆண்களுக்கஇயல்பாவயதகாட்டிலுமமுதுமையாதோற்றமகாணப்படுகிறது.

தொடர்ந்தஷேவிஙசெய்வதனகாரணமாமுகத்திலமுதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடனகூடிஷேவிஙகிரீமபயன்படுத்துவதநல்லது. மேலுமஷேவிஙசெய்யும்போதமுடிகளவளர்ந்திருக்குமதிசையிலஷேவசெய்து, வெதுவெதுப்பாதண்ணிராலமுகத்தகழுவேண்டும். அவ்வாறசெய்தாலமுகமவாடாமலபுத்துணர்ச்சியுடனதோன்றும்.

ஆண்களஎன்றுமஇளமையுடனஇருக்தொடர்ந்உடற்பயிற்சியுமபழங்கள், காய்கறிகள், பருப்பவகைகள், உடலுக்ககுளிர்ச்சி தருமஇறைச்சிகளமற்றுமமீனபோன்ஆரோக்கிஉணவுகளஉட்கொள்வேண்டும். உடலதிசுக்களபுதுப்பிக்குமதிறனுடைஆன்டிஆக்ஸிடன்டகுணமநிறைந்பேகசெய்யப்பட்உணவுகளஉட்கொள்வதால், முகமசுருக்கமஇல்லாமலுமமென்மையாகவுமகாணப்படும்.

மேலுமபசலகீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சதேநீரபோன்றவற்றையுமசேர்த்துகொள்வதமிகவுமநல்லது.

சருமத்தஇளமையுடனவைத்திருக்மதமற்றுமபுகைப்பிடித்தலதவிர்க்கவும். சிகரெட்டுகளிலஉள்நிக்கோட்டினஉடலினஇரத்ஓட்டத்தகுறைப்பதாலசருமத்திற்கதேவையாசத்துகளசென்றஅடைவதில்லை, ஆகையாலசுருக்கங்களஏற்படுமவாய்ப்பஉள்ளது.

தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவிலகுறைந்தது 6-7 மணி நேஆழ்ந்த உறக்கமஅவசியமஎன்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தாலமனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றிற்குமமேலாக, ஆண்களதனதகவலைகளமறந்தமகிழ்ச்சியுடனஇருந்தாலே, முகத்திலபொலிவுமஇளமையுமகூடிக்கொண்டபோகும். . . !