Tuesday, February 21, 2012

மூத்த வீரர்கள் மந்தமா? 'தோனி கூறியது தெரியாதே'- சேவாக்

துவக்க வீரர்களை சுழற்சி முறையில் ஆடவைப்பதன் காரணம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கத்தான் என்று சேவாக் உள்ளிட்டோர் கூறினாலும் தோனியே கூட அதனை அணி நிர்வாகத்தின் ஒட்டு மொத்த முடிவு என்று கூறினாலும், கடைசியில் முதல் 3 வீரர்களை சுழற்சி முறைக்கு ஆட்படுத்தியது ஃபீல்டிங்கில் 20 ரன்களை மிச்சம் செய்ய முடிகிறது என்று தோனி அன்று கூறியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

மூத்த வீரர்களின் மந்தமான பீல்டிங்கினால் 20 ரன்கள் அதிகம் கொடுக்கிறோம் என்று தோனி கூறியது தனக்குத் தெரியாது என்று சேவாக் இன்று கூறியுள்ளார்.

இது குறித்து சேவாக் கூறுகையில், துவக்க வீரர்களை சுழற்சி முறையில் ஆட வைப்பது குறித்து தோனி, என்னிடம், சச்சினிடம், கம்பீரிடம் தனித்தனியாக பேசினார். அப்போது அடுத்த உலகக் கோப்பை இங்கு நடைபெறுவதால் இந்த பிட்சில் இவர்கள் அனுபவம் பெறவேண்டும் என்றார், அது சரியாகவே பட்டது தானும் அதுபோன்ற ஒரு கருத்தில் இருந்ததால் அதனை எற்றதாகவும் சேவாக் கூறினார்.

"அவர் மந்தம் பற்றி குறிப்பிட்டது தெரியாது, அவர் என்ன கூறினார், மீடியாவில் என்ன போய்க் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது" என்றார் சேவாக்.

அதேபோல் 3 துவக்க வீரர்களை 11-இல் வைப்பது அவ்வளவு இயலாத காரியமா? என்று கேட்டதற்கு, "அப்படியல்ல என்று நினைக்கிறேன், உலகக் கோப்பையில் நாங்கள் மூவரும் விளையாடினோம் போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றோம். நாங்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறோம், எந்த ஒரு அணியிலும் வீரர்களை சுழ்ற்சி முறையில் விளையாடவைப்பது நல்லதே.

தோனியின் ஃபீல்டிங் மந்தம் கருத்து பற்றி கூறிய சேவாக், "இன்று எனது கேட்சை பார்த்தீர்களா?" என்று இன்று ஜெயவர்தஏயிற்கு டைவ் அடித்து ஒருகையால் கேட்ச் எடுத்ததையே சேவாக் இவ்வாறு குறிப்பிட்டார்.

20 ரன்களை இளம் வீரர்கள் மிச்சப்படுத்துவார்கள் என்றால், அவர்கள் தொடர்ந்து பேட்டிங்கில் தோல்வியடைந்தாலும் அணியில் நீடிக்கவேண்டுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சேவாக், ச்கிண்டலா, சீரியசா என்று புரியாதவண்ணம், "நீங்கள் தோனியிடம்தான் மீண்டும் கேட்கவேண்டும், அவர் எங்களிடம் கூறியது இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பதே. அவர்கள் இங்கு வந்து உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடவேண்டும், இதுதான் தோனி எங்களிடம் கூறியது.

இப்போது தோனியிடம் பேசுவீர்களா? நான் எதுக்குப் பேசவேண்டும், அவர் அணித் தலைவர், அவரும் பயிற்சீயாளரும் முதல் கள வீரர்கள் வரிசையில் பிரேக்குகள் வேண்டுமென்றால் அது எனக்கு சரியானதாகவே படுகிறது. எனக்கு அதில் ஒன்றும் சர்ச்சைகள் இல்லை.

நான் அனைத்துப் போட்டிகளுக்கும் உடற்தகுதியுடந்தான் இருந்தேன், ஆனால் பயிற்சியாளர், கேப்டன் இவர்களே விளையாடும் 11-ஐத் தேர்வு செய்யவேண்டும். அவர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று கூறினால் எனக்கு இந்த இடைவெளி மகிழ்ச்சியஏ.

தோனியிடன் கடந்த உலகக் கோப்பைக்கு முன்பே நானே கூறினேன், கோலி, ரெய்னா, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த உலகக் கோப்பைக்கு முன்பு குறைந்தக்டு 100 ஒருநாள் போட்டிகளிலாவது பங்கேற்கவேண்டும் என்று, இது ஒரு நல்ல சிந்தனைதான் என்றார் சேவாக்.

அணியில் பிளவு இல்லை, நாங்கள் சிறப்பாகவே ஒரு அணியாக மகிழ்ச்சியாக இர்க்கிறோம் என்று வெளியில் கூறினாலும் உள்ளுக்குள் ஒருவருக்கொருவர் தொடர்புபடுத்துவதில் உள்ள சிக்கலையே மேற்கூறிய விஷயங்கள் காட்டுகிறது.

போட்டியை கடைசி ஓவர் வரை இழுக்கக்கூடாது என்கிறார் கம்பீர், அடுத்த நாளே தோனி முதல் வரிசை வீரர்களே போட்டியை வென்றிருக்கவேண்டும் என்கிறார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்கிறார் தோனி பிறகு முதல் 3 வீரர்களை மாற்றுவதன் மூலம் 20 ரன்கள் மீசப்படுத்துகிறோம் என்கிறார்.

உண்மையில் சேவாக், சச்சின், தோனி இடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!


0 comments:

Post a Comment