Saturday, December 24, 2011

திடீர் திருடனாக மாறிய கணவர்: போலீசிடம் போட்டுக்கொடுத்தார் மனைவி

ஊட்டி: ஊட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில், ஓய்வூதியதாரரிடமிருந்து 40 பவுன் நகை "அபேஸ்' செய்த கணவர் குறித்து புகார் அளித்த மனைவியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

ஊட்டி அருகேயுள்ள தங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமன் (60). அருவங்காடு வெடிமருந்து தொழிசாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், ஊட்டி மிஷனரி ஹில் பகுதியில் சொந்த வீடு கட்டுவதற்காக, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கூட்டுறவு சென்ட்ரல் பாங்கில், 40 பவுன் நகையை அடகு வைப்பதற்காக, கடந்த 21ம் தேதி காலை சென்றுள்ளார். நகை வைத்திருந்த பையை ஒரு நாற்காலியில் வைத்து விட்டு, விண்ணப்ப படிவத்தை எடுப்பதற்காக கவுன்டருக்கு சென்று, திரும்பி பார்த்த போது, பை காணாமல் போனது.
இதுதொடர்பாக, ஊட்டி பி1 போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நகை திருட்டு தொடர்பாக குமார்(42) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். குமார் தாம்பட்டியை சேர்ந்தவர். பாலகொலாவில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று, குமார் ஊட்டி மத்திய கூட்டுறவு வங்கியில் பணம் கட்ட வந்த போது, ராமனிடம் உள்ள நகையை திருடி சென்றுள்ளார். நகையை வீட்டுக்கு கொண்டு


0 comments:

Post a Comment