Saturday, December 17, 2011

பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம்


இன்று சமூக இணைய தளத்தின் வளர்ச்சி மிக அபாரமாக உள்ளது.யாரை பார்த்தாலும் சமூக இணையதளத்தில் சேர்ந்து தன்னுடைய கருத்துகளையும் ,புகைபடங்களையும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.சமூக இணைய தளத்தில் இணைந்து அதை நல்ல முறையாக பயன்படுத்துபவரும் உண்டு ..அதற்க்கு அடிமையானவர்களும் உண்டு.சமூக இணைய தளம் பல வித சர்ச்சைகளும் ஏற்படுவது உண்டு.சில வாரங்களுக்கு முன்பு கூட சோனியா காந்தியை பற்றி தரக் குறைவாக செய்தி வெளியிட்டிருந்தது  பேஸ்புக் இணைய தளம்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் சில அரசியல் வாதிகள்.

தொலைத்தொடர்பு துறைக்கான மத்திய அமைச்சர் கபில் சிபில் சமூக இணைய தளங்களுக்கான தணிக்கை வேண்டும் என்று கூறி பெரிய சர்ச்சைக்குள்ளனர்.சமூக இணைய தளத்தில் கருத்து சுதந்திரம் வேண்டும் என்று ஒரு தரப்பினர் கபில் சிபில் க்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இன்னொரு புறம் வட மாநில இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு ஆறுவை சிகிச்சை தேவைக்காக ரத்தம் வேண்டும் என்று தனது பேஸ்புக் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தார்,அதன் விளைவாக தனது தந்தைக்கு ரத்தம் கிடைத்தது.இதனால் பேஸ்புக் இல் இதற்காக தனி இணைய தளத்தை உருவாக்கி ரத்த தானம் வேண்டுவோற்க்கன ஆன்லைன் சேவை யை உருவாக்கி உள்ளார்.அதாவது இந்த இணையதளத்தில் ரத்தம் கொடுப்போர் பற்றிய தகவல்கள் அடங்கி இருக்கும்
இணைய தளம் :socialblood.org 

சமூக இணைய தளத்தில் நன்மைகள் பல இருந்தாலும் ,அதற்கு அடிமையானவர்களும் உண்டு.அது மட்டுமல்லாமல் பெண்கள் பல தொல்லைகள் இந்த சமூக இணைய தளம் மூலமாக நிறையவே வருகிறது.இதற்கெனே ஒரே தீர்வு பெண்களுக்கென தனி சமூக இணைய தளம் உள்ளது.இந்த தளத்தில் பெண்கள் மட்டுமே இணைய முடிய முடியும்.

ஆண்களின் தொல்லையை தடுப்பதற்காகவும் மற்றும் பெண்கள் வன்முறையை தடுப்பதற்காகவும்  பெண்களுக்கென ஒரு சமூக இணைய தளத்தை தொடங்கி உள்ளார் கனடா வைச் சேர்ந்த ஒரு பெண்மணி.இந்த இணைய தளத்தில் ஆண்கள் சேர தடை விதிக்கப் பட்டுள்ளது. லிங்க்டு இன் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற இணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைய தளம்: https://www.luluvise.com/



0 comments:

Post a Comment