Tuesday, February 7, 2012

10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்‌வி‌ல் கருணா‌நி‌தி குடு‌ம்ப‌‌‌த்தை வ‌ம்பு‌க்கு இழுத்த த‌னியா‌ர் ப‌ள்‌ளி

கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 10ஆ‌‌ம் வகு‌ப்பு அரையாண்டு தேர்வு வினாத்தாளில் தி.மு.க தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தினர் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பது தி.மு.க.‌வின‌ர் இடையே பெரு‌ம் கொ‌ந்த‌‌ளி‌‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

கோவ‌ை‌யி‌ல் உ‌ள்ள அ‌ந்த தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வினத்தாளில் இவ்வாறு கருத்துக்கள் அச்சிடப்பட்டு அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கள் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக தி.மு.க குற்றம்சா‌ற்‌றியுள்ளது.

ஆனா‌ல் இதனை ப‌ள்‌ளி ‌‌நி‌‌ர்வாக‌ம் மழு‌ப்பலாக ப‌தி‌ல் கூ‌றியது. பாளையங்கோட்டையச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கேள்வித்தாளை தயாரித்து வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனா‌ல் சம்பந்தப்பட்ட நிறுவனமோ, இது குறித்து விசாரணை நடத்திய பின்னர் பதில் அளிப்பதாக தெரிவித்து‌ள்ளது.
THANKS WEBDUNIA


0 comments:

Post a Comment