தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக...

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபை...

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

Saturday, December 24, 2011

பெண்களை தொடாமல் உணர்ச்சிவசப்பட வைக்க முடியுமா?

ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா? உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும்.

அது எப்படி..? .தொடர்ந்து படியுங்கள்

பூக்களின் வாசம் தரும் இதம்

மலர்களின் சுகந்தம் தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும் அப்புறம் பாருங்கள்.

அருகாமையில் அமருங்கள்

துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.

திராட்சையும் ஸ்ட்ராபெரியும்

காதலை வெளிக்கொணரும் மலர்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதீத கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பறவையின் இறகு

பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.

பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம்

தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர்.

இந்த வழிமுறைகளை நீங்கள் அப்ளை செய்து பாருங்கள். அப்புறம் என்ன நீங்கள் தொடவே வேண்டாம். உங்களுக்கு வேண்டியது தானாகவே கிடைக்கும்.

ஈரோட்டில் 23 யானைகள் பலி: வனத்துறை

ஈரோடு: ஈரோட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 23 யானைகள் வரை பலியாகியுள்ளதாக வனத்துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார். ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் வனச்சரகத்தில் 1200 யானைகள் உள்ளது. இதில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகின. ஒன்று கொல்லப்பட்டது. மீதி 19 யானைகள் இயற்கையாக பலியாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 2 யானைகள்பலியானதாக ஈரோடு மாவட்ட வன அதிகாரி அருண் கூறினார்.

அரக்கோணம் அருகே 2 மகன்களுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அரக்கோணம்:அரக்கோணத்தில் 2 மகன்களுடன் இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தனியை அடுத்த மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பாபு(32). இவரது மனைவி ராதிகா(28). இவர்களுக்கு ரோசன்(6), நவீன்குமார் என்ற 2 மகன்கள் இருந்தனர்.

நேற்று திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள அம்மன் கோவிலுக்கு 2 மகன்களுடன் சென்ற ராதிகா சாமி கும்பிட்டார். அதன்பிறகு அங்கிருந்து பாசஞ்சர் ரயில் மூலமாக வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மோசூர் ரயில் நிலையம் வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் ராதிகா 2 மகன்களுடன் நடந்து சென்றார்.

அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்ற ராதிகா 2 மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி இறந்தது குறித்த தகவல் அறிந்த ராதிகாவின் கணவர் பாபு அரக்கோணம் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்து, கதறி அழுதார்.

அதன்பிறகு தனது மனைவி ராதிகா தற்கொலை செய்திருக்கமாட்டார் என்றும், தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி பலியாகி இருக்கலாம் என்றும், தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாபு போலீசாரிடம் கூறினார்.

செக்ஸை பெண்கள் விரும்ப 200 காரணங்கள்!

தாம்பத்திய உறவில் ஈடுபட பெண்களைப்பொறுத்தவரை உடல்ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஒரு ஆண், பெண்ணுடனான உறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கடைசி இடம்தானாம்.

போரடித்தால் செக்ஸ்

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும் போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

போரடிப்பதால் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப் பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு 'இதைப்' பார்த்தா என்று ஆண்கள்மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு 'டீ' சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

.மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுப வங்களை கண்டறிந்து அதன்மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

மனதுக்குள் ஸ்கேன் செய்யும் பெண்கள்

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அவர்களை பற்றி ஆய்வு செய்து கொண்டே இருப்பார்களாம்.

ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன 'ஸ்கேனரில்' விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண் ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடைசியில் திருப்திதான்

கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.

திருமணமான பெண்களுக்கு 'செக்ஸ்' பிடிக்காதா?

திருமணமான பெண்கள் செக்ஸை வெகு சீக்கிரமே வெறுக்கத் தொடங்கி விடுவதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு இணையதளம் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 2500 திருமணமான பெண்களிடம் இந்த இணையதளம் கருத்துக் கணிப்பை நடத்தியது. அவர்களிடம் திருமணத்திற்கு பின்னர் உங்களது செக்ஸ் வாழ்க்கை எப்படி உள்ளது என்று கேட்டுள்ளனர். அதில் கிடைத்த பதில்கள் வியப்பூட்டுவதாவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்ததாக அந்த இணையதளம் தெரிவிக்கிறது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 77 சதவீதம் பேர் செக்ஸ் தங்களது வாழ்க்கையில் முக்கியமான ஒன்றுதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், 50 சதவீத பெண்கள், செக்ஸ் தங்களது முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாகவும், சங்கடமூட்டுவதாகவும், மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்களாம்.

அதேசமயம், 54 சதவீதம் பேர் செக்ஸை தாங்கள் விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

29 சதவீத பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை தங்களுக்கு சோர்வைக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்குமே சிறு வயது குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளைக் கவனிக்கவே நேரம் போதவில்லை என்பதால் செக்ஸ் விஷயங்கள் தங்களால் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்று இவர்கள் கூறியுள்ளனர்.

சரி செக்ஸுக்கு மாற்று வழியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று கேட்டதற்கு, 24 சதவீதம் பேர் அதற்குப் பதில் நல்ல குளியலைப் போடலாம் என்று கூரியுள்ளனர். 26 சதவீதம் பேர் புக் படித்து பொழுதைக் கழிப்பேன் என்று கூறியுள்ளனர்.

23 சதவீத பெண்கள், தங்களது கணவர்களை நேசிப்பதால் செக்ஸ் உறவுக்கு உடன்படுவதாக கூறியுள்ளனர். கணவரை சந்தோஷமாக வைப்பது அவசியமாயிற்றே என்பது இவர்களின் விளக்கமாக உள்ளது.

49 சதவீத பெண்கள், தங்களுக்கு செக்ஸ் தேவை என்பதால் உறவு கொள்வதாக கூறியுள்ளனர்.

26 சதவீதம் பேர், குழந்தை பிறப்புக்குப் பின்னர்தான் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செக்ஸ் இல்லாத திருமண வாழ்க்கை நிச்சயமாக சாத்தியமில்லை என்கிறார் திருமண உறவுகள் குறித்த நிபுணர் ஷனான் பாக்ஸ். திருமண வாழ்க்கையில் செக்ஸை வெறுப்பது என்பதற்கு இடமே இல்லை. பின்னர் அந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். செக்ஸில் நாட்டமில்லை என்று கூறியுள்ள பெண்களுக்கு உடல் ரீதியிலான அல்லது மன ரீதியிலான பிரச்சினைகள் இருக்கலாம். மற்றபடி திருமணத்தை இங்கு குறை கூற முடியவே முடியாது என்கிறார் பாக்ஸ்.

மேலும் அவர் கூறுகையில், 77 சதவீத பெண்கள் செக்ஸ் முக்கியமானது என்று கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். இப்படிக் கூறும் பெண்கள் செக்ஸை விரும்பவில்லை என்று கூறினால் அதற்கு வேறு காரணம் இருக்கலாம். செக்ஸ் தேவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதேசமயம், அதை மேற்கொள்ள முடியாத அளவுக்கு புறச் சூழல்கள் அவர்களுக்கு அமைந்திருக்கலாம். அதை சரி செய்ய அவர்கள் முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடும் என்றும் பாக்ஸ் எச்சரிக்கிறார்.

செக்ஸில் மனைவிக்கு நாட்டமில்லை என்ற நிலை வரும்போது நிச்சயம் அவர்களின் கணவர்கள் பாதை மாறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அந்த நிலைக்குப் போகும்போது திருமண பந்தத்தின்மீதும் அந்தப் பெண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்பட்டு விடலாம். இது அவர்களின் மனதையும் வெகுவாக பாதித்து தேவையில்லாத பல விளைவுகளுக்கு இட்டுச் சென்று விடும் என்பது பாக்ஸின் கருத்து.

சர்க்கரை இல்லாமல் வெறும் பாலைச் சாப்பிட்டால் சுவையாக இருக்காது. அதேபோல வெறும் சர்க்கரையை மட்டும் சாப்பிடவும் முடியாது. இரண்டும் இணைந்தால்தான் இனிமை. அதுபோலத்தான் திருமண வாழ்க்கையும், செக்ஸ் உறவும். இதில் எது ஒன்று குறைந்தாலும் வாழ்க்கை கசந்து போய் விடும்.

இதை இந்தப் பெண்கள் உணர்ந்தால் உறவும் இனிக்கும், உள்ளமும் தெளிவாக இருக்கும்.

Friday, December 23, 2011

ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் : ஆதார் அடையாள அட்டை!

இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

27.10.2011  முதல் அண்ணாசாலை தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்க உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது.

கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf

கார்டு பெற தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/proof_of_identity_documents_supported.pdf

தங்கத்தில் மினு மினுக்கும் மொபைல்போன்: விலை ஜஸ்ட் ரூ.25 லட்சம்

ரூ.25 லட்சம் விலையில் 18 கேரட் தங்கத்தை கொண்டு முலாம் பூசப்பட்ட ஆடம்பர மொபைல்போன் கிரெஸ்ஸோ பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.
விலையை கேட்டவுடன் புதிய வசதிகள் கொட்டிக்கிடக்கும் என்று தப்பு கணக்கு போட்டிவிட வேண்டாம். இதில், பூசப்பட்ட தங்க முலாமுக்குத்தான் இந்த கொள்ளை விலை. ஆனால், வசதிகளை எடுத்துக்கொண்டால் நம்மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் 3,000 ரூபாய் போனில் இருக்கும் அதே வசதிகள்தான் இருக்குமாம்.

இந்த போனில் 150 கிராம் எடைக்கு 18 கேரடன் தங்கத்தைக் கொண்டு  முலாம் பூசியுள்ளனர். முன்பக்கம் கருப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைத்துள்ளனர். மேலும், பட்டன்கள் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் ஜொலிக்கிறது.

பட்டன்கள் வட்ட வடிவிலும், திரைக்கு கீழே நேவிகேஷன் கீயும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கிரெஸ்ஸோ கிராண்ட் பிரிமியர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள் இந்த போனின் பெயரில்தான் ஆடம்பரம் தெரிகிறது. போனின் தோற்றம் மற்றும் வசதிகளில் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

இந்த ஆடம்பர போன் லிமிடேட் எடிசன் மொபைல்போனாக விற்பனைக்கு வர இருக்கிறது. மொத்தமே 30 கிரெஸ்ஸோ கிராண்ட் பிரிமியர் போன்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த போன் விற்பனை செய்யப்படும் என்று கிரெஸ்ஸோ தெரிவித்துள்ளது.

மலேசிய விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள்: அமைச்சர் அறிவிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் கோங் சோ ஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

மலேசியாவில் வசித்து வரும் அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மலேசிய அரசு விரும்புகிறது. மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதம் பேர் தமிழர்கள்.

இந்த ஆண்டு சென்னையில் இருந்து 2,26,353 பயணிகள் மலேசியாவுக்கு கோலாலம்பூர் விமான நிலையம் வழியாக வந்துள்ளனர். கோலாலம்பூர் வழியாக சென்னைக்கு 2,07,697 பேர் சென்றுள்ளனர்.

சென்னைக்கு செல்லும் 90 சதவீதம் பயணிகளுக்கு ஆங்கிலத்தை விட தமிழில் பேசினால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. மலேசியாவில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் பயணிகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழில் தகவல்கள், அறிவிப்புகளை வெளியிட கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று கோலாலம்பூர் விமான நிலையம் உள்பட நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக சென்னைக்கு செல்லும் விமானங்கள் குறித்து அறிவிப்புகளை தமிழில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் தமிழில் பேச்சு திறன் கொண்டவர்கள் அதிகளவில் உள்ளதால் தமிழில் அறிவிப்புகள் வெளியிடத் தேவையான ஆட்கள் கிடைப்பதில் எந்த சிரமும் ஏற்படாது. இந்த திட்டம் அடுத்த ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் என்றார்.

Thursday, December 22, 2011

தற்கொலை செய்யக்கூடாது: விஜயகாந்த் "அட்வைஸ்'

சென்னை: ""மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக்கூடிய பிரச்னைகளுக்காக யாரும் தற்கொலை செய்யக்கூடாது'' என கட்சி தொண்டர்களுக்கு விஜயகாந்த் கண்டிப்புடன் ஆலோசனை கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் சீலையம்பட்டி பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (எ) இடிமுழக்கம் சேகர்,42, தே.மு.தி.க.,வின் தலைமைக் கழக பேச்சாளர். கடந்த 20ம் தேதி மாலை விருத்தாசலத்திற்கு வந்தவர், அங்குள்ள லாட்ஜில் தற் கொலை செய்து கொண்டார். அங்கிருந்த கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறி வருகிறார். அவ்வாறு அணையை உடைத்தால் ஐந்து மாவட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

விஜயகாந்த் அறிவுரை: மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக் கூடிய பிரச்சனைகளுக்காக யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: முல்லை பெரியாறு அணை பிரச்னைக்காக, தேனி மாவட்டத்தை சேர்ந்த தே.மு.தி.க., பேச்சாளர் இடிமுழக்கம் சேகர், விஷம் குடித்து இறந்த செய்திக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாட்டு பிரச்னைகளை மனதில் கொண்டு இளைஞர்கள், தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம். தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக்கூடிய இப்பிரச்னைகள், தங்கள் உயிரை போக்கி கொள்வதால் மட்டும் தீர்க்க முடியாது. எனவே, எதிர்காலத்தில் இத்தகைய உணர்ச்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.