Saturday, December 24, 2011

திருமணமான பெண்களுக்கு 'செக்ஸ்' பிடிக்காதா?

திருமணமான பெண்கள் செக்ஸை வெகு சீக்கிரமே வெறுக்கத் தொடங்கி விடுவதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு இணையதளம் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 2500 திருமணமான பெண்களிடம் இந்த இணையதளம் கருத்துக் கணிப்பை நடத்தியது. அவர்களிடம் திருமணத்திற்கு பின்னர் உங்களது செக்ஸ் வாழ்க்கை எப்படி உள்ளது என்று கேட்டுள்ளனர். அதில் கிடைத்த பதில்கள் வியப்பூட்டுவதாவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்ததாக அந்த இணையதளம் தெரிவிக்கிறது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 77 சதவீதம் பேர் செக்ஸ் தங்களது வாழ்க்கையில் முக்கியமான ஒன்றுதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், 50 சதவீத பெண்கள், செக்ஸ் தங்களது முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாகவும், சங்கடமூட்டுவதாகவும், மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்களாம்.

அதேசமயம், 54 சதவீதம் பேர் செக்ஸை தாங்கள் விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

29 சதவீத பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை தங்களுக்கு சோர்வைக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்குமே சிறு வயது குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளைக் கவனிக்கவே நேரம் போதவில்லை என்பதால் செக்ஸ் விஷயங்கள் தங்களால் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்று இவர்கள் கூறியுள்ளனர்.

சரி செக்ஸுக்கு மாற்று வழியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று கேட்டதற்கு, 24 சதவீதம் பேர் அதற்குப் பதில் நல்ல குளியலைப் போடலாம் என்று கூரியுள்ளனர். 26 சதவீதம் பேர் புக் படித்து பொழுதைக் கழிப்பேன் என்று கூறியுள்ளனர்.

23 சதவீத பெண்கள், தங்களது கணவர்களை நேசிப்பதால் செக்ஸ் உறவுக்கு உடன்படுவதாக கூறியுள்ளனர். கணவரை சந்தோஷமாக வைப்பது அவசியமாயிற்றே என்பது இவர்களின் விளக்கமாக உள்ளது.

49 சதவீத பெண்கள், தங்களுக்கு செக்ஸ் தேவை என்பதால் உறவு கொள்வதாக கூறியுள்ளனர்.

26 சதவீதம் பேர், குழந்தை பிறப்புக்குப் பின்னர்தான் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செக்ஸ் இல்லாத திருமண வாழ்க்கை நிச்சயமாக சாத்தியமில்லை என்கிறார் திருமண உறவுகள் குறித்த நிபுணர் ஷனான் பாக்ஸ். திருமண வாழ்க்கையில் செக்ஸை வெறுப்பது என்பதற்கு இடமே இல்லை. பின்னர் அந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். செக்ஸில் நாட்டமில்லை என்று கூறியுள்ள பெண்களுக்கு உடல் ரீதியிலான அல்லது மன ரீதியிலான பிரச்சினைகள் இருக்கலாம். மற்றபடி திருமணத்தை இங்கு குறை கூற முடியவே முடியாது என்கிறார் பாக்ஸ்.

மேலும் அவர் கூறுகையில், 77 சதவீத பெண்கள் செக்ஸ் முக்கியமானது என்று கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். இப்படிக் கூறும் பெண்கள் செக்ஸை விரும்பவில்லை என்று கூறினால் அதற்கு வேறு காரணம் இருக்கலாம். செக்ஸ் தேவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதேசமயம், அதை மேற்கொள்ள முடியாத அளவுக்கு புறச் சூழல்கள் அவர்களுக்கு அமைந்திருக்கலாம். அதை சரி செய்ய அவர்கள் முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடும் என்றும் பாக்ஸ் எச்சரிக்கிறார்.

செக்ஸில் மனைவிக்கு நாட்டமில்லை என்ற நிலை வரும்போது நிச்சயம் அவர்களின் கணவர்கள் பாதை மாறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அந்த நிலைக்குப் போகும்போது திருமண பந்தத்தின்மீதும் அந்தப் பெண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்பட்டு விடலாம். இது அவர்களின் மனதையும் வெகுவாக பாதித்து தேவையில்லாத பல விளைவுகளுக்கு இட்டுச் சென்று விடும் என்பது பாக்ஸின் கருத்து.

சர்க்கரை இல்லாமல் வெறும் பாலைச் சாப்பிட்டால் சுவையாக இருக்காது. அதேபோல வெறும் சர்க்கரையை மட்டும் சாப்பிடவும் முடியாது. இரண்டும் இணைந்தால்தான் இனிமை. அதுபோலத்தான் திருமண வாழ்க்கையும், செக்ஸ் உறவும். இதில் எது ஒன்று குறைந்தாலும் வாழ்க்கை கசந்து போய் விடும்.

இதை இந்தப் பெண்கள் உணர்ந்தால் உறவும் இனிக்கும், உள்ளமும் தெளிவாக இருக்கும்.


0 comments:

Post a Comment